Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எம் குமரன் S/O மகாலட்சுமி 2 - ஜெயம் ரவி வாயால் சொன்ன தகவல் இதோ!

UDHAYA KUMAR June 30, 2022 & 20:41 [IST]
எம் குமரன் S/O மகாலட்சுமி 2 - ஜெயம் ரவி வாயால் சொன்ன தகவல் இதோ!Representative Image.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் எம் குமரன் S/O மகாலட்சுமி. இந்த படத்தில் ரவி ஜோடியாக அசின் நடித்திருப்பார். ரவிக்கு அம்மாவாக நதியா, அப்பாவாக பிரகாஷ்ராஜ், நண்பனாக விவேக் ஆகியோர் நடித்திருப்பார்கள். 

எம் குமரன் S/O மகாலட்சுமி, ஜெயம் ரவியை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக முன்னிறுத்திய படமாகும். அவரது திரை வாழ்க்கையையே புரட்டி போட்ட படம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஜெயம் ரவியிடம் இந்த படம் குறித்து கேட்கப்பட்டது. 

எம் குமரன் S/O மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகம் குறித்தும் ஜெயம் ரவி பேசினார். அதன்படி இந்த திரைப்படம் விரைவில் உருவாகும் எனவும் அதற்கான பணிகளை மோகன் ராஜா செய்து வருகிறார் எனவும் கூறியுள்ளார் ரவி. இதன்மூலம் எம் குமரன் S/O மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி. 

இதேபோல, ஜெயம் ரவி நடிப்பில் உருவான தனிஒருவன் படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாகவிருப்பதாக கூறி சுவாரஸ்யத்தைக் கூட்டியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்