Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இரண்டாவது இடத்தில் விக்ரம்! வேற லெவல் சாதனை!

UDHAYA KUMAR June 13, 2022 & 16:59 [IST]
இரண்டாவது இடத்தில் விக்ரம்! வேற லெவல் சாதனை!Representative Image.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் இணைந்து நடித்திருக்கும் விக்ரம் திரைப்படம் கடந்த 10 நாட்களாக பயங்கரமாக போய்க்கொண்டிருக்கிறது. வசூல் மழை என்றால் சும்மா சொல்லிவிடக் கூடாது வேற லெவலுக்கு பின்னி பெடலெடுக்கிறது வசூல். 

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரின் நடிப்பு உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. நல்ல விமர்சனமும், படத்தைப் பற்றிய சந்தேகங்களும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டே வருகின்றன. 

தற்போது உலகம் முழுக்க 300 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் போய்க்கொண்டிருக்கிறது. மிகப் பிரம்மாண்டமான வசூல் தமிழின் 2வது மிகப்பெரிய வசூல் கொண்ட படமாக விக்ரமை ஆக்கியுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த 2.ஓ திரைப்படம் 300 கோடியைத் தாண்டியிருந்தது. அந்த படத்தின் மொத்த பட்ஜெட் 700 கோடி அளவில் மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் ரிலீசுக்குப் பிறகு அது வசூல் செய்தது 600 கோடி ரூபாய் அளவுக்குத்தான் என கூறப்படுகிறது. தோல்விப்படமான இந்த படத்தின் வசூலுக்குப் பிறகு, இப்போது விக்ரம் திரைப்படம்தான் அதிக அளவில் வசூல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்