Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

The Kerala Story | 'இதெல்லாம் உண்மை கதையா?' கேரளா ஸ்டோரி படம் குறித்து கமல் அதிரடி கருத்து...

Nandhinipriya Ganeshan Updated:
The Kerala Story | 'இதெல்லாம் உண்மை கதையா?' கேரளா ஸ்டோரி படம் குறித்து கமல் அதிரடி கருத்து...Representative Image.

சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா ஷர்மா, தேவதர்ஷினி, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடித்து சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய படம், தி கேரளா ஸ்டோரி (The Kerala Story). இந்த படம் கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் என்பதால் இப்படத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல பிரபலங்களும் அரசியல் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்தனர். இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனும் தி கேரளா ஸ்டோரி படம் குறித்த தனது கருத்தினை கூறியுள்ளார்.

அபுதாபியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் IFFA Awards 2023 எனும் திரைப்பட திருவிழா நடைப்பெற்று வருகிறது. இதில், பாலிவுட்நட்சத்திரங்களான சல்மான் கான், விக்கி கெளஷல், ஏ.ஆர்.ரஹ்மான், ரகுல் ப்ரீத் சிங், ஜெனிலியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அதற்காக அபுதாபி சென்ற கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் தி கேரளா ஸ்டோரி படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு கமல்ஹாசன் கூறியதவாவது:

இதெல்லாம் உண்மை கதையா? டைட்டில் கார்டில் 'உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்று போடும் அளவிற்கு படத்தில் உண்மை இல்லை' எனவும், அப்படி போட்டாலும் மக்களை இதுதான் உண்மை கதை என ஏமாற்றிவிட முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும், தி கேரளா ஸ்டோரி படத்தை மதத்துவவேஷ பிரச்சாரம் செய்யும் படம் என குறிப்பிட்ட கமல் இந்த படத்தை தான் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளார். இவரது கருத்து நேற்று முதல் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்