Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

யூடியூப் ட்ரெண்டிங்கில் விருமன் ட்ரைலர்...Rolex மற்றும் Dilli மேடையில் வைத்து செய்த சம்பவம்..!

madhankumar August 04, 2022 & 11:52 [IST]
யூடியூப் ட்ரெண்டிங்கில் விருமன் ட்ரைலர்...Rolex  மற்றும் Dilli மேடையில் வைத்து செய்த சம்பவம்..!Representative Image.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள "விருமன்" படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் ட்ரைலர் வெளியிட்டு நேற்று மதுரையில் வைத்து நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, நடிகர்கள் கார்த்தி, இளவரசு, சிங்கம்புலி, சூரி, ரோபோ சங்கர், ஆர்.கே. சுரேஷ், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனர் சங்கர், நடிகைகள் அதிதி, வடிவுக்கரசி, மைனா நந்தினி, இந்துஜா, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது "விருமன்" படத்தின் மூன்று பாடல்களும் படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது.  முன்பு வெளியான முத்தையா படங்களை போலவே இப்படமும் கிராமத்து பின்னணியில் ஆக்ஷன், காதல், காமெடி, எமோஷன் உள்ளிட்டவை கலந்து ஒரு பக்கா கமர்ஷியல் படம் போல் உருவாகியுள்ளது எனத் தெரிகிறது. மேலும் தற்போது வரை 3 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில்  விருமன் ட்ரைலர் உள்ளது.

இசைவெளியீட்டு விழாவின் இறுதியில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த "ரோலெக்ஸ் மற்றும் டில்லி"  ஆகிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவரும் மேடையில் எரிய அந்த தருணம் அரங்கமே அதிர்ந்தது என கூறலாம். அப்போது "விக்ரம்" படத்தில் நடிகர் சூர்யா ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் பேசிய "எஸ் சார், நோ சார், ஓகே சார்" என்ற வசனத்தை கைதி படத்தில் டில்லியாக நடித்திருந்த நடிகர் கார்த்தியிடம் பேசினார்.

மேலும் டில்லி VS ரோலெக்ஸ் எப்போது என ரசிகர்கள் முழக்கமிட்டபோது அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என நடிகர் சூர்யா கூறினார். விக்ரம் படத்தை தொடர்ந்து சூர்யா மற்றும் கார்த்தி, கமல் ஆகியோர் கதாபாத்திரங்களை வைத்து வரிசையாக படங்களை இயக்கவுள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

"விருமன்" படம் வருகிற ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்