Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் பிறந்தநாள் ட்ரீட் - ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது லியோ ஃபர்ஸ்ட் லுக்

Aruvi Updated:
விஜய் பிறந்தநாள் ட்ரீட் - ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது லியோ ஃபர்ஸ்ட் லுக்Representative Image.

சென்னை: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதனை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
கோலிவுட் ரசிகர்களிடம் மோஸ்ட் வாண்டட் திரைப்படமாக இப்போது இருப்பது லியோ படம்தான். மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய்யுடன் லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு அவர் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் படம் நிச்சயம் மெகா ஹிட்டாகும் என பட அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

விஜய் பிறந்தநாள் ட்ரீட் - ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது லியோ ஃபர்ஸ்ட் லுக்Representative Image

காஷ்மீரில் தொடங்கிய லியோ ஷூட்டிங் அங்கு மொத்தம் 52 நாட்கள் கடுமையான குளிரில் நடைபெற்றது. அதனையடுத்து சென்னை திரும்பி பிரசாத் ஸ்டூடியோ, பையனூர், ஆதித்யராம் ஸ்டூடியோ உள்ளிட்ட இடங்களில் ஷூட்டிங் நடந்தது. 2000 டான்ஸர்களுடன் விஜய் நடனம் ஆடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இன்னும் பத்து நாட்களில் ஷூட்டிங் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழலில் விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவிருப்பதால் படத்திலிருந்து என்ன மாதிரியான அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அன்றைய தினம் படத்திலிருந்து நா ரெடிதா என்ற சிங்கிள் பாடல் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். அதுதொடர்பான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் பிறந்தநாள் ட்ரீட் - ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது லியோ ஃபர்ஸ்ட் லுக்Representative Image

செம ட்ரீட்தான்: விஜய் பிறந்தநாளையொட்டி லோகேஷ் கனகராஜ் சில நாட்களுக்கு முன்னதாக தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவரிடம் விஜய் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிள் மட்டும்தான் வருமா என கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அன்றைய தினம் முழுக்க ரசிகர்களுக்கு செம ட்ரீட் காத்திருக்கிறது என சஸ்பென்ஸ் வைத்தார். இதனையடுத்து என்னென்ன விஷயங்கள் லியோவிலிருந்து வெளியாகும் என தளபதி ரசிகர்கள் நகத்தை கடிக்க ஆரம்பித்தனர்.

விஜய் பிறந்தநாள் ட்ரீட் - ரத்தம் தெறிக்க தெறிக்க வெளியானது லியோ ஃபர்ஸ்ட் லுக்Representative Image

இதனையடுத்து லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். அதன்படி சரியாக 12 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.கையில் ரத்தம் தெறிக்க பெரிய சுத்தியலோடு இருக்கிறார் விஜய். அவரது பின்னணியில் காஷ்மீர் மலை தொடரும் முன்னால் இரண்டு பற்களும் பறந்துகொண்டிருக்கின்ற்ன.

மேலும் அந்தப் போஸ்டரில் அடக்கப்படாத நதிகளின் உலகில் அமைதியான நீர் தெய்வீக கடவுள்களாக அல்லது பயங்கரமான பேய்களாக மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இந்தப் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்