Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

சதீஷ் ஜோடியாக சிம்ரன்... கலக்குறேள் போங்கோ!

UDHAYA KUMAR Updated:
சதீஷ் ஜோடியாக சிம்ரன்... கலக்குறேள் போங்கோ!Representative Image.

நகைச்சுவை நடிகராக அறிமுகமான சதீஷ் இப்போது கதாநாயகனாக அடுத்தடுத்து படம் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதனை அறிந்த ரசிகர்கள் கலக்குறேள் போங்கோ என பாராட்டி வருகின்றனர். 

லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக சதீஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக புதுமுகம் சிம்ரன் நடிக்கிறார்.  இந்த படத்தை ஒயிட் கார்பெட் ஃபிலிம்ஸ் கே.விஜய் பாண்டி தயாரிக்கிறார். இதில் சதீஷுடன் ஆனந்த்ராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு பிறகு சதீஷ் கதாநாயகனாக தொடர்ந்து நிறைய படங்கள் நடிப்பார் என நம்பப்படுகிறது. 

இந்த படத்துக்கான தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. லோகேஷ் கனகராஜ்,  டிரைடன்ட் ஆர்ஸ்ட் ரவீந்திரன், லலித், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்