Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

50 கோடியை கடந்த வசூல் வேட்டை.. தெறிக்க விடும் லவ் டுடே!!

Sekar November 19, 2022 & 12:21 [IST]
50 கோடியை கடந்த வசூல் வேட்டை.. தெறிக்க விடும் லவ் டுடே!!Representative Image.

கோமாளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் அறிமுக இயக்குனராக உருவாக்கிய கோமாளி படம் 90ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான நிலையில், தற்போது 2 ஆண்டுகளுக்குப்பிறகு பிரதீப் ரங்கநாதன் 2கே கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து இயக்கி நடித்துள்ள படம் தான் லவ் டுடே.

இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் அறிமுக நாயகியாக இவானா நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் கடந்த நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் முதல் நாளில் வெறும் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதிகரித்து இரண்டாம் நாள் ரூ.5.35 கோடியும், மூன்றாம் நாள் ரூ.6.25 கோடியும் வசூலித்து, முதல் மூன்று நாட்களில் படம் கிட்டத்தட்ட ரூ.14 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், தற்போது இந்த படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. குறைந்த பட்ஜெட் படமாக எடுக்கப்பட்ட இது மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், படக்குழுவினருக்கு பாராட்டக்குக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்