Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

Love Today Viral Video : லவ் டுடே இயக்குநரை இடுப்பில் தூக்கிய ரசிகர்.... வைரல் வீடியோ!

Manoj Krishnamoorthi Updated:
Love Today Viral Video : லவ் டுடே இயக்குநரை இடுப்பில் தூக்கிய ரசிகர்.... வைரல் வீடியோ!Representative Image.

செல்போன் வந்த பிறகு காதலர்களுள் தகவல் தொடர்பு எவ்வளவு வளர்ந்ததோ அதே அளவு தனிப்பட்ட அந்தரங்கமும் உண்டு. இது காதலர்களுக்குள் மட்டும் இல்லை தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கு இது பொருந்தும். இன்றைய டிஜிட்டல் இளைஞர்களின் காதலை மையமாகக் கொண்டு பிரிதீப் இயக்கி நடித்த திரைப்படம் லவ் டுடே ஆகும். 

நவம்பர் 4 அன்று வெளியாகி, தற்போது வரை சக்கை போடு போட்டு கொண்டிருக்கிறது. சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு, ஆஜித் என பல நடித்த லவ் டுடே திரைப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றிக்கு காரணம் யதார்த்தமாக நம்மை சுற்றி நிகழும் அன்றாட நிகழ்வுகளைக் கதையாக கொண்டதாகும். 

ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் நம்மை எளிதில் கதையுடன் புகுத்திவிட்டது. ரிலீஸான நாள் முதல் வசூலை வாரி குவித்த "லவ் டுடே" திரைப்படம் இன்று (25.11.2022) தெலுங்கிலும் வெளியாகி உள்ளது.     

"லவ் டுடே" திரைப்படம் ஃப்ஸ்ட் ஷோ முதல் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்த திரைப்படத்தை காண அதிகாலை முதல் ரசிகர் கூட்டம் அலைமோதியதே படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது. இன்று தெலுங்கில் ரிலீஸான "லவ் டுடே" திரைப்படத்தை இயக்குநர் மற்றும் ஹீரோ பிரீதிப் ரங்கநாதன், இவானா ஆகியோரும் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தனர். 

படம் முடிந்து வெளியில் வரும்போது ஒரு ரசிகர் இயக்குநர் பிரீதிப் ரங்கநாதனை தூக்கி வைத்து கொண்டாடினார். மேலும், ஐ லவ் யூ சார் என்று ரசிகர்கள் கட்டி அணைத்து தங்கள் அன்பை வெளிக்காட்டினர். இப்படி இயக்குநரை அலேக்காக தூக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்