Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லோகேஷ் இயக்கத்தில் பிரபல வில்லன்! அவருடையே ஃபேவரைட் இவர்தான்!

UDHAYA KUMAR June 10, 2022 & 12:00 [IST]
லோகேஷ் இயக்கத்தில் பிரபல வில்லன்! அவருடையே ஃபேவரைட் இவர்தான்!Representative Image.

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வெற்றியை சமீபத்தில் பெற்றுத் தந்தவர் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படத்தின் மூலம் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய அளவில் பெயரையும் பொருளாதாரத்தையும் பெற்றுத் தந்துள்ளார் என்று பத்திரிக்கைகளில் எழுதப்பட்டு வருகின்றன. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. 

கைதி படத்தை மன்சூர் அலிகானுக்காக எழுதியிருந்ததாக முன்னர் ஒரு பேட்டியில் லோகேஷ் தெரிவித்திருந்தார். மன்சூரா லோகேஷுக்கு மிகவும் பிடிக்குமாம்.  விக்ரம் படம் வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார் லோகேஷ். மன்சூர் அலிகானை எப்போது இயக்குவீர்கள் எனக் கேட்டதற்கு, விரைவில் என பதிலளித்திருந்தார் லோகேஷ். 

இதன்மூலம் மிக விரைவில் லோகேஷ் இயக்கத்தில் மன்சூர் அலிகான் நடிப்பார் என கூறப்படுகிறது. தளபதி 67 படத்தில் மன்சூர் அலிகான் இருப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 

தளபதி 67 லோகேஷ் இயக்கத்தில் தான் வரப்போகிறது என்கிற செய்தி ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. வம்சி இயக்கத்தில் நடித்து வரும் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு லோகேஷ் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்