Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தாயின் அன்பைப் போற்றும் சிறப்பான தமிழ் பாடல்கள்..! | Mothers Day 2023 Special Songs in Tamil

Gowthami Subramani Updated:
தாயின் அன்பைப் போற்றும் சிறப்பான தமிழ் பாடல்கள்..! | Mothers Day 2023 Special Songs in Tamil Representative Image.

இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் பிரம்மன் தான் படைத்தார் என்றால், அதற்கு உயிர் கொடுத்து பத்து மாதங்கள் பெற்றெடுத்து சுமந்தவள் தாய். தன் வலியையும் பொருட்படுத்தாது, தன்னுடைய பிள்ளைகளைப் பெற்று அவர்களுடைய சிரிப்பில் தனது இன்பம் காண்பவள் என்றே கூறலாம். தாயின் அன்பு என்பது உணர்ச்சி மிக்க ஒன்றாகும். நிஜத்திலும் மட்டுமல்ல, சினிமாவிலும் தாயின் அன்பைச் சித்தரிப்பது பெருமிதம் தான். அந்த வகையில், தாயின் அன்பைப் போற்றும் சில பாடல்கள் நம்முடைய உணர்ச்சிகளை எழுச்சியூட்டும் விதமாகவே அமைகின்றன. அந்த வகையில், தமிழ் சினிமாவில் இடம் பெற்றிருக்கும் தாயாரின் பாடல்களை இதில் காணலாம்.

மன்னன்

எந்த காலம் ஆனாலும், நம் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்த மன்னன் படத்தில் வரும் “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” என்ற பாடல் கேட்போர்களின் நெஞ்சை உருக வைப்பதாகவே அமைகிறது.

நியூ

எஸ்.ஜே.சூர்யா, சிம்ரன், மற்றும் தேவயாணி நடிப்பில் வெளியான திரைப்படம் நியூ. இத்திரைப்படத்தில் வரும் “காலையில் தினமும் கண் விழித்தால் நான் கை தொடும் தேவதை அம்மா” பாடல் தாயின் அன்பையும், தாயைப் போற்றும் வகையிலும் அமையக்கூடிய திரைப்படம் ஆகும்.

எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி

ஜெயம் ரவி, அசின், நதியா நடித்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் வரும் “நீயே நீயே நானே நீயே” பாடல் ஒற்றை அன்னைகளின் அன்பை அழகாகக் கூறும் பாடலாக அமைகிறது.

ராம்

ஜீவா, சரண்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ராம். இந்தப் படத்தில் வரும் “ஆராரிராரோ” பாடல் கேட்பதற்கு இனிமையாகவும், தாயின் அன்பை எடுத்துக் கூறும் வகையில் இந்தப் பாடல் அமையும்.

வியாபாரி

எஸ்.ஜே.சூர்யா, தமன்னா நடித்த திரைப்படம் வியாபாரி. இப்படத்தில் வரும் “ஆசபட்ட எல்லாத்தையும், காசிருந்தா வாங்கலாம்” என்ற பாடல் விலை மதிப்பற்ற பாடலாகும்.

முப்பொழுதும் உன் கற்பனைகள்

அதர்வா முரளி நடித்து வெளியான திரைப்படமான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில், ஜிவி. பிரகாஷ் மற்றும் சித்தாரா கிருஷ்ணகுமார் குரலில் வரும் பாடலான “கண்கள் நீயே காற்றும் நீயே” பாடல் மகன் மீது வைத்துள்ள தாயின் அன்பை வெளிப்படுத்துவதாக உள்ளது.

வேலையில்லா பட்டதாரி

தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வரும் “அம்மா.. அம்மா.. நீ எங்க அம்மா.. உன்ன விட்டா எனக்கு யாரு அம்மா..” பாடல் கல் மனதையும் கரைய வைக்கும் பாடல் ஆகும்.

பிச்சைக்காரன்

விஜய் ஆண்டனி நடிப்பில் பல்வேறு நபர்களின் மக்களைக் கவர்ந்த திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்தில் வரும் பாடலான “நூறு சாமிகள் இருந்தாலும், அம்மா உன்னைப் போல் ஆகிடுமா” என்ற பாடல் அம்மாவின் அருமையை உணர்த்தும் பாடல்.

வலிமை

அஜித் குமார் நடித்த வலிமை படத்தின் பாடலான “அம்மா என் முகவரி நீ அம்மா” பாடல் அனைத்து உயிர்களுக்கும் முகவரியாக இருக்கும் அம்மாவின் பெருமையை வெளிப்படுத்தக்கூடிய பாடலாக இந்தப் பாடல் அமையும்.

வாரிசு

விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் வரும் பாடலான “ஆராரிராரிரோ கேக்குதம்மா” பாடல் பல கோடி மக்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த பாடலாக அமைகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்