Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கணெக்ட் படம் எப்படி இருக்கு? | Connect movie review in Tamil

UDHAYA KUMAR Updated:
கணெக்ட் படம் எப்படி இருக்கு? | Connect movie review in TamilRepresentative Image.

கதை சுருக்கம்: 

படம் 98 நிமிடங்கள் ஓடுகிறது. 

லாக் டவுன் காலத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது போன்ற ஒரு கதையை ஹாரர் எலிமெண்ட் இருக்கும் படம். 

நயன்தாரா, வினய் தம்பதிக்கு, ஒரு மகள். நயன்தாராவின் அப்பா சத்யராஜ். கொரோனா லாக்டவுன் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. இந்த சமயத்தில் டாக்டரான வினய் மரணித்துவிடுகிறார். அப்பாவை இழந்த மகளும், கணவனை இழந்த மனைவியும் எப்படியாவது வினய்யுடன் பேச வேண்டும் என விளைகிறார்கள். ஆனால் இறந்தவர்களுடன் பேசுவது அத்தனை சுலபம் இல்லை என சற்று ஹாரரான விசயத்தை தைரியமாக செய்ய முடிவு செய்கிறார்கள். 

ஓஜோ போர்டில் அப்பாவிடம் பேசுகிறேன் என மகள் செய்த சிறு தவறால், அங்கு ஒரு குழப்பம் ஏற்படுகிறது. கொரோனா சமயத்தில், வெளியில் செல்லமுடியாத நிலையில், பூட்டப்பட்ட வீட்டுக்குள் பேய் ஒன்று நுழைந்து, அந்த குடும்பத்தை படாத பாடு படுத்தினால் என்ன ஆகும். இதுதான் கணெக்ட் படத்தின் கதை. 

 

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் இன்று  வெளிவந்துள்ள திரைப்படம் கணெக்ட்.  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அட்டகாசமான நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சத்யராஜ், வினய், அனுபம் கெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையிலான காட்சிகளுடன், திகில் கதைக்களத்தில் அமைந்துள்ள இப்படம் திரில்லர் பட ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே தனது முந்தைய படங்களான மாயா, கேம் ஓவர் ஆகிய படங்கள் மூலம் தமிழக மக்களிடையே நல்ல இயக்குனர் என பெயரெடுத்தவர் அஸ்வின் சரவணன். இதனால் அந்த பெயரைக் காப்பாற்ற வேண்டும் என தத்தெடுத்த கதையை நன்கு மெருகேற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கென தனித்துவமாக வடிவமைத்திருக்கிறார் என்கிறார்கள் விமர்சகர்கள். 

ஏற்கனவே இப்படத்தின்  டீசர் மற்றும் ட்ரைலர் வெளிவந்து இரண்டுமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

" படம் டெக்கனிகளாக பிரமாதமாக உள்ளது என்றும், திகில் மூட்டும் கதைக்களம் அசரவைக்கிறது என்றும் பல விமர்சகர்கள் கூறியுள்ளனர். இயக்குனரின் முயற்சி, அவரின் கதைக்கென நயன்தாரா கொடுத்துள்ள இடம் உள்ளிட்டவை படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம். 99 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம் நம் கவனத்தை சிதறவிடவில்லை.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்