Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ott release today RRR,ஜெர்ஸி, 12த் மேன்... இந்த வார OTT ரிலீஸ்!

UDHAYA KUMAR May 20, 2022 & 11:39 [IST]
ott release today RRR,ஜெர்ஸி, 12த் மேன்... இந்த வார OTT ரிலீஸ்!Representative Image.

மே மாதத்தின் இறுதி வாரத்தை நெருங்கிவிட்டோம். இந்நிலையில், ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகும், வெளியாகியுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். வீக்கெண்ட்டில் கண்டு களிக்க இப்போதே தேர்ந்தெடுங்கள். 

இந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என பல மொழிகளிலும் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சில திரைப்படங்கள் நேரடியாகவே ஓடிடி தளங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. சில தியேட்டர் ரிலீசுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகின்றன.  வாருங்கள் அவற்றின் பட்டியலை காண்போம்.

12th Man

Watch 12th Man - Disney+ Hotstar

இந்தியாவின் கம்ப்ளீட் ஆக்டர் என அழைக்கப்படும் மோகன்லால், தனது அடுத்தடுத்த படங்களை ஓடிடியில் விடுகிறார். அரபிக்கடலின் சிங்கம், ஆராட்டு உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு சென்று பின் ஓடிடியில் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ப்ரோ டேடி படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியது. இப்போது 12த் மேன் படமும் அதே ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

த்ரிஷ்யம் 1 மற்றும் 2 பாகங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு பெருகியுள்ளது. மலையாளம் மட்டுமின்றி மற்ற மொழி பேசும் மக்களும் இந்த படத்துக்காக காத்திருக்கின்றனர். உங்களுக்கு இந்த தகவல் புதியதா? இன்னும் படத்தை பார்க்கவில்லையா. உடனடியாக இந்த டிரெய்லரை பார்த்துவிட்டு, படத்தை பார்ப்பதற்கான முயற்சிகளில் இறங்குங்கள். 

வெளியான தேதி - 20 மே 2022

பால தண்டாதனா 

Bhala Thandanana Movie Review: Tepid Twists and Turns

தெலுங்கு சினிமா உலகின் வளர்ந்து வரும் இளம் கதாநாயகன் ஸ்ரீவிஷ்ணு, தனது ஒவ்வொரு கதைகளையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கும் இவரது நடிப்பில் வெளியானதுதான் பால தண்டாதனா திரைப்படம்.  இதுவும் த்ரில்லர் வகையைச் சார்ந்த திரைப்படம்தான். தியேட்டரில் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருந்தாலும், இதன் கண்டென்ட் ஓடிடி ரசிகர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில்தான் வெளியாகியுள்ளது. 

வெளியான தேதி - 20 மே 2022


எஸ்கேப் லைவ்

ESCAYPE LIVE | Official Trailer | Disney Hotstar | Mallika Singh,  Siddharth.S | Escaype Live Trailer - YouTube

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிரபலமான நடிகரான சித்தார்த் நடித்துள்ள இந்த வெப் தொடர், ஆறு கதாபாத்திரங்களின் குணாதிசயத்தையும், அவர்களின் போராட்டம், அதிர்ஷ்டம் உள்ளிட்டவற்றை குறித்து பேசுகிறது. எஸ்கேப் லைவ் என்றழைக்கப்படும் ஒரு பிரபல சோசியல் மீடியா ஆப், ஒரு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பணம் பரிசாக வழங்கும் என அறிவித்துள்ளது. அதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இப்படி பட்ட சூழலில் எந்த எல்லைக்கும் போக நினைக்கும் ஆறு பேரின் கதைதான் இது. 

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. 

வெளியான தேதி - 20 மே 2022

ஆர் ஆர் ஆர்

It's official now: 'RRR' set for OTT release on May 20

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்த மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இப்போது ஜீ5 ஆப்பில் ஓடிடி வெளியீடாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. 

ஜீ5 ஆப்பில் தமிழ், கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கிடைக்கிறது. 

வெளியான தேதி - 20 மே 2022

ஜெர்ஸி

Jersey movie review: Shahid Kapoor hits a century in a film that's just too  long - Hindustan Times

நானி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஜெர்ஸி திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படமான இது இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்