Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியானது சூப்பர் ஸ்டார் பட டிரைலர்.. ஹிட்டு ஹிட்டு ஹிட்டு...!

UDHAYA KUMAR Updated:
வெளியானது சூப்பர் ஸ்டார் பட டிரைலர்.. ஹிட்டு ஹிட்டு ஹிட்டு...!Representative Image.

இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 11 மணிக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு ஷாருக்கான் நடித்துள்ள படம் பதான். இந்த படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது.  இதனைக் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வந்த பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், டிரைலர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இதனிடையே, இன்று காலை 11 மணி அளவில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கம்பாடியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. இந்திய அளவில் டிரெண்டாகி வரும் இந்த வைரல் டிரைலர், பாலிவுட்டின் மிகப் பெரிய வசூல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

படம் ஆரம்பிக்கும்போதே பல சர்ச்சைகளோடு துவங்கியுள்ளது டீசரில் காவி உடை அணிந்து கவர்ச்சி காட்டியதாக தீபிகா படுகோன் மீது புகார் எழுந்து, பாஜக, இந்துத்துவா கட்சிகள் சண்டைக்கு தயாராக இருக்கின்றன. அனைவரும் சேர்ந்து படத்தை வெளியிட விடமாட்டோம் என கூறியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்