Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

pathu thala release date வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து இதே ஆண்டில் ரிலீசாகும் பத்து தல! சிம்பு ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்

UDHAYA KUMAR June 24, 2022 & 16:48 [IST]
pathu thala release date வெந்து தணிந்தது காடு படத்தைத் தொடர்ந்து இதே ஆண்டில் ரிலீசாகும் பத்து தல! சிம்பு ரசிகர்களுக்கு மாஸ் அப்டேட்Representative Image.

மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல. இந்த இரண்டு படங்களும் இதே ஆண்டில் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 

சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஐசரி கணேசன் தயாரித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருந்தார். இந்நேரம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிம்புவின் அப்பாவுக்கு ஏற்பட்ட உடல் நலமின்மை காரணமாக படப்பிடிப்பு தாமதமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிம்புவின் போர்சன் தவிர மற்ற போர்சன்கள் அனைத்து எடுக்கப்பட்டுவிட்டதாம். அவை போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் அனுப்பப்பட்டு விட்டது எனவும் கூறுகின்றனர். 

வெந்து தணிந்தது காடு திரைப்படத்துக்காக உடல் எடையை வெகுவாக குறைத்திருந்தார் சிம்பு. ஆனால் இந்த படம் கேங்க்ஸ்டர் கதாபாத்திரம் என்பதால் கொஞ்சம் உடல் எடை கூடி நடிக்க வேண்டும் என்பதால் அதற்காக தயாராகி வருகிறார்.  மே மாதமே ஷூட்டிங் திட்டமிட்டு தாமதமானதால் போஸ்ட் பான்ட் செய்யப்பட்டு இப்போது ஜூலையில் மீண்டும் துவங்கவுள்ளது பத்து தல ஷூட்டிங். 

ஜூலை 15ம் தேதி முதல் சிம்பு படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனவும் ஒரே இழுப்பாக 45 நாட்கள் தொடர் ஷூட்டிங் எனவும் கூறுகிறார்கள். ஆகஸ்ட் முடிவுக்குள் படம் முடிந்து, டிசம்பரில் படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் எனவும் தகவல். அநேகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது. 

பத்து தல படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.  சிம்புடன் கௌதம் கார்த்திக்,  கலையரசன், ப்ரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்