Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் இசை வெளியீடு - எந்த டிவியில வருது தெரியுமா?

UDHAYAKUMAR September 07, 2022 & 16:30 [IST]
பொன்னியின் செல்வன் இசை வெளியீடு  - எந்த டிவியில வருது தெரியுமா?Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் தேடி வருகிறார்கள். இதுகுறித்த தகவல்களுடன், நேற்றைய விழாவின் ஹைலைட்ஸ்களைப் பார்க்கலாம். 

பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலின் அடிப்படையில், அந்த கதையை வசனங்களை மெருகேற்றி,  தமிழ் சினிமாவுக்கு ஏற்றாற்போல வடிவமைத்துள்ளார் இயக்குநர் மணி ரத்னம். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத் குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.  லைகா புரொடக்ஷன்ஸுடன் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு இசை ஏ ஆர் ரஹ்மான். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து பொன்னி நதி பாடலும் பின்னர் சோழா சோழா பாடலும் வெளியாகியிருந்தது. இந்த பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து நேற்று மற்ற பாடல்களும் வெளியிடப்பட்டன. 

9 மணிக்கு டிரைலர் வெளியீடு நிகழும் என அறிவிக்கப்பட்ட போதிலும் விழா தொடங்க தாமதமானதால் இரவு 12 மணி அளவிலேயே டிரைலர் ரிலீஸ் ஆனது.  கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் இணைந்து டிரைலரை வெளியிட்டனர். 

கமல்ஹாசனின் கர்ஜிக்கும் குரலில் தொடங்கிய இந்த டிரைலர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கமல்ஹாசன் அரங்குக்குள் நுழையும்போது எழுந்த கரவொலிகளும் சத்தமும் விண்ணைப் பிளந்தன. விக்ரம் விக்ரம் என கமல்ஹாசனின் பெயரைக் கூறி ரசிகர்கள் அதகளப்படுத்தினர். 

இந்த விழாவில் கலந்துகொண்டவர்களின் புகைப்படங்களையும் தொடர்ந்து காண்போம். 

Image

 

Image

Image

Image

Image

Image

Image

Image

Image

மிகவும் கட்டுக்கோப்பாக நடைபெற்ற இந்த பொன்னியின் செல்வன் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்ச்சி விரைவில் சன்டிவியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. சன்டிவி நிர்வாகம் இதன் உரிமையைப் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 26ம் தேதி இந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும் எனவும் தகவல் தெரிவிக்கின்றது.

ponniyin selvan audio launch telecast channel, ponniyin selvan audio launch where to watch, ponniyin selvan audio launch in which channel, ponniyin selvan audio launch live telecast tv channel, ponniyin selvan audio launch live telecast channel


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்