Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஜப்பானில் வசூலை வாரிக்குவிக்கும் ராஜமவுலி படம்!

UDHAYA KUMAR Updated:
ஜப்பானில் வசூலை வாரிக்குவிக்கும் ராஜமவுலி படம்!Representative Image.

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் ஆர் ஆர் ஆர். இந்த படத்தில் நாயகர்களாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடித்திருப்பர். எம்எம் கீரவாணி இசையில் நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது பெற்றிருந்தது. 

இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என இந்திய மொழிகளில் சக்கைப் போடு போட்டதோடு நில்லாமல் இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளிலும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. 

1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்ற இந்த படம் தற்போது ஜப்பானிலும் வெளியாகி சக்கைப் போடு போட்டுக்கொண்டிருக்கிறது. வசூலை வாரிக் குவித்து வருகிறது ஆர் ஆர் ஆர்.  இப்போது வரை 41 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்துள்ளது படம். கடந்த ஆண்டு வரை ஜப்பானில் நன்கு வசூல் செய்த இந்திய படமாக ரஜினிகாந்த் நடித்த முத்து படமே இருந்துள்ளது. 

இந்நிலையில், முத்து படத்தை விட இரு மடங்கு வசூலைப் பெற்றுள்ளது ஆர் ஆர் ஆர். ஆனாலும் முத்து படம் 1998ம் ஆண்டிலேயே 20 கோடியைக் கடந்திருந்தது. இது மிகப் பெரிய சாதனையாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்