Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிகரும் நடிகையும் பண்ணை வீட்டில் ஒரே ஜாலி... திருமணம் பத்தி கேட்டா மட்டும் நோ பதில்...!

UDHAYAKUMAR July 27, 2022 & 13:01 [IST]
நடிகரும் நடிகையும் பண்ணை வீட்டில் ஒரே ஜாலி... திருமணம் பத்தி கேட்டா மட்டும் நோ பதில்...!Representative Image.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையான வாரிசு நடிகை, தற்போது ஹிந்தியிலும் வாய்ப்பைப் பெற்று நடிக்கவுள்ளாராம். இவருக்கும் பிரபல நடிகருக்கும் காதல் இருப்பதாக அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டாலும், இருவரும் வெளியே சுற்றும் வகையில் எந்த புகைப்படமும் வெளியில் வராமல் பாதுகாப்பாக இருக்கிறார்கள். 

விசாரித்து பார்க்கும்போதுதான் தெரிகிறது பண்ணை வீட்டில் இருவரும் ஜாலியாக இருக்கிறார்களாம். வெளியில் எங்கேயும் சந்திக்காமல் அங்கு மட்டுமே இருவரின் சந்திப்பும் நடக்கிறதாம். சென்னையில் பீச் ஹவுஸ் ஒன்றில் இரவு விடிய விடிய விருந்து நடக்கிறதாம். அதிலும்கூட திரைத் துறை சார்ந்த யாரையும் அனுமதிக்காமல் மிகவும் நெருங்கிய நண்பர்களை மட்டுமே அனுமதித்து ஜாலியாக இரவை கழிக்கிறார்கள் என தகவல். 

நடிகைக்கு திருமண வயது தாண்டி வருவதால் அவர்கள் வீட்டிலும் திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தல் தொடங்கிவிட்டதாம். ஆனால் நடிகரின் கண் அசைவுக்காக காத்திருக்கிறாராம் நடிகை. நடிகர் சொல்லும் நபரைத் தான் திருமணம் செய்வது என ஒரே முடிவில் இருக்கிறாராம் அந்த இளம் நடிகை. கேட்டால் பிராக்டிகல்லாக யோசிங்க பாஸ் என நண்பர்களிடம் விளக்கம் வேறு கொடுக்கிறாராம். இவர்களுக்குள் இருப்பது காதல்தானா என புலம்பி வருகிறார்கள் நெருங்கிய நண்பர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்