Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ரோஜா சீரியல் நாயகியின் புதிய நெடுந்தொடர் சீதா ராமன் | Seetha Raman Serial Promo

Priyanka Hochumin Updated:
ரோஜா சீரியல் நாயகியின் புதிய நெடுந்தொடர் சீதா ராமன் | Seetha Raman Serial PromoRepresentative Image.

சீரியல் பிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வரப்போகும் புதிய தொடர் "சீதா ராமன்" பற்றிய விவரங்கள்.

சன் டிவி தொலைக்காட்சியில் மக்களின் நெஞ்சங்களைக் கவர்ந்த ரோஜா சீரியலின் கதாநாயகி பிரியங்காவின் புத்தம் புதிய நெடுந்தொடர். மற்றும் விஜய் தொலைக்காட்சியில் சிற்பிக்குள் முத்து நெடுந்தொடரில் தனது தனித்துவமான நடிப்பில் பிரபலமான ஜூஜே டிசோசா தான் இத்தொடரின் கதாநாயகன். மேலும் ரக்ஷா மற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி ஆகியோர் சப்போர்டிங் ரோலில் நடிக்கின்றனர்.

இத்தொடரின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதன் மூலம் நமக்குத் தெரிய வரும் கதையானது சீதாவின் அக்கா மற்றும் கதாநாயகன் ராமனுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்படுகிறது. அனைவரும் திருமணம் கொண்டாட்டத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். திருமணம் நடந்து முடிந்த பிறகு ராமன் வீட்டிற்கு சென்ற பின்பு தான் தெரிகிறது சீதாவின் அக்காவிற்கு பதிலாக சீதாவுக்கும் ராமனுக்கும் திருமணம் நடக்கிறது.

ராமன் வீட்டில் சீதா அழகாக இல்லை என்பதால் தங்கள் வீட்டின் மருமகளாக இருக்கும் தகுதி இல்லை என்று வெளியே அனுப்பி விடுகின்றனர். இந்த போராட்டத்தை தாண்டி தன்னுடைய வாழ்க்கையில் வெற்றி பெருவால சீதா என்பது தான் இத்தொடரின் கதை. இத்தொடர் என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்