Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு வந்த ஷாருக்கான்!

UDHAYA KUMAR June 09, 2022 & 12:06 [IST]
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு வந்த ஷாருக்கான்! Representative Image.

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராகிய ஷாருக்கான்,  தமிழின் சிறந்த கதாநாயகிகளுள் ஒருவரான நயன்தாரா திருமணத்துக்கு வருகை தந்துள்ளார். தற்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகை நயன்தாரா நானும் ரௌடிதான் திரைப்படத்தின் போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்ததாகவும், அப்போது இருந்து இருவரும் வாழ்வில் ஒன்றாக பயணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. பின்னர் அவர்களே இதை உறுதிப்படுத்தும் வகையில் பல விசயங்களும் நடந்தது. இந்நிலையில் இருவரும் ஊரறிய திருமணம் செய்து கொண்டு சட்டப்படி கணவன் மனைவியாக முடிவு செய்தனர். அதற்கான முகூர்த்த நாள்தான் இன்று. 

ஜூன் 9ம் தேதியான இன்று அதிகாலையிலேயே திருமண விழா தொடங்கி இப்போது விக்னேஷ் சிவனின் மனைவியாகிவிட்டார் நயன்தாரா. 

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்துக்கு இந்தியா முழுக்க இருந்து மிக முக்கிய பிரபலங்களை மட்டும் விழாவுக்கு அழைத்திருந்தனர். இதனால் பெரிய அளவில் கூட்டம் கூடாமல் விழா கெடாமல் பார்க்கமுடியும் என திட்டமிட்டிருந்தனர். இவரது திருமண விழாவுக்கு நடிகர் ஷாருக்கானை அழைத்திருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அவர் வருவாரா என பலரும் யோசித்திருந்தநிலையில், காலையிலேயே வந்து அசத்தியுள்ளார் ஷாருக். 

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக் செம்மயான லுக்கில் திருமணத்தில் கலந்துகொண்டுள்ளார். திருமண புகைப்படம் வெளியாகவில்லை என்றாலும் ஷாருக்கான் விழாவுக்கு செல்லும் முன்னர் எடுத்த புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்