Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிவகார்த்திகேயனின் மாவீரன் அப்டேட்...!

UDHAYA KUMAR Updated:
சிவகார்த்திகேயனின் மாவீரன் அப்டேட்...! Representative Image.

மண்டேலா படத்தை இயக்கிய மடோனா அஸ்வினின் அடுத்த படம் மாவீரன். இந்த படத்தில் கதாநாயகனாக சிவகார்த்திகேயனும் நாயகியாக அதிதி ஷங்கரும் நடித்து வருகின்றனர். மிஷ்கின் மற்றும் நடிகை சரிதா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனராம். 

மாவீரன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் துவங்கும் என தெரிகிறது. 

பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் படம் ரிலீஸாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், போஸ்ட் புரடக்ஷன் பணிகளின்போதே புரமோஷன் பணிகளையும் துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு. 

புத்தாண்டு தினத்தில் மாவீரன் படத்தின் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக  முதல் பாடல்  வரும் டிசம்பர் 24ம் தேதி ரிலீசாகுமாம். டாக்டர், டான் என அடுத்தடுத்து 100 கோடி வசூல் படங்களைக் கொடுத்துவிட்டு பிரின்ஸ் படத்தால் அதளபாதாளத்துக்கு போய்விட்டார் சிவகார்த்திகேயன். இந்நிலையில், மாவீரன் படத்தையே நம்பியிருக்கிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்