Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாபா மட்டுமில்லிங்க... சிவாஜியும் ரிலீஸ்..! நீங்க ரெடியா?

UDHAYA KUMAR Updated:
பாபா மட்டுமில்லிங்க... சிவாஜியும் ரிலீஸ்..! நீங்க ரெடியா?Representative Image.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பாபா படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், சிவாஜி படமும் ரிலீசாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதனை ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது. 

ரஜினிகாந்த் கோடி கோடியாக சம்பளம் வாங்கி குவித்தாலும் அவர் சினிமாவில் முதலீடு செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. அவர் இதுவரை 2 படங்கள் மட்டுமே தயாரித்துள்ளார். ஒன்று வள்ளி, இன்னொன்று பாபா. இரண்டு படங்களும் ரஜினி ரசிகர்களாலே வெறுத்து ஒதுக்கப்பட்ட படங்கள். காரணம் தமிழகத்துக்கு சம்பந்தம் இல்லாத ஆன்மீக பிரச்சார நெடி நிறைந்த படங்களாக அமைந்தன. அதேநேரம் தமிழகம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ராகவேந்திரா படம் நல்ல வரவேற்பை பெற்றது. காரணம் அன்பை போதிக்கும் படமாக அது அமைந்ததே. 

பாபா படத்தில் டெக்னிக்கலாக பல விசயங்கள் பிரச்னையாக இருந்தபோதும், ரஜினிக்காக சில ரசிகர்கள் பார்த்தார்கள். ஆனால் இப்போது தலைமுறை மாறிவிட்டது, இந்த காலத்து பசங்க தலையில் பாபாவை ஏற்றி வைக்கிறார்கள். இன்று ரீரிலீஸ் செய்யப்படுகிறது பாபா. 

பெரியார் மண்ணான தமிழகத்தில் பாபா எப்படி ஓடுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இப்போது ரசிகர்களுக்கு இன்னொரு இன்ப அதிர்ச்சியாக சிவாஜி படமும் ரிலீசாகி இருக்கிறது.  பிவிஆர் சினிமாஸ், இந்தியா சினிபோலிஸ் திரைகளில் 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை படம் திரையிடப்படுகிறது. 

2007ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஷ்ரேயா, விவேக், சுமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ஹிட்டான படம் சிவாஜி. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்