Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மெல்போர்ன் திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் சூர்யாவின் படம்..!

madhankumar July 29, 2022 & 15:36 [IST]
மெல்போர்ன் திரைப்பட விழாவில் திரையிடப்படும் நடிகர் சூர்யாவின் படம்..!Representative Image.

மெல்போர்னின் இந்திய திரைப்பட விழா (IFFM) அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதில் சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் படம் திரையிடப்பட உள்ளது. 

மேலும்  தி ரோட் டு குதிரையர், பெரியநாயகி மற்றும் பராசக்தி ஆகிய தமிழ் திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படுகின்றன என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு, IFFM ஆகஸ்ட் 12-20 வரை நடைபெறுகிறது. அதில் வலுவான மற்றும் மனதைக் கவரும் கதைகளைக் கொண்ட சில அழகான இந்தியத் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சூர்யா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஜெய்பீம் திரைப்படம் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் பராசக்தி திரைப்படம் திரையிடப்படுகிறது. சுதாகொங்கராவின் இணை இயக்குநரான சிவகணேஷ் இதனை இயக்கியுள்ளார்.

நடிகை டாப்ஸியின் பாலிவுட் படமான டோபார படமும் இதில் திரையிடப்படுகிறது. இந்த விழாவில் அபிஷேக் பச்சன், கபில் தேவ், கபீர் கான், ஷெபாலி ஷா மற்றும் வாணி கபூர் ஆகியோருடன், நம்ம நட்சத்திரங்களான சமந்தா மற்றும் தமன்னா ஆகியோர் பங்கேற்கின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்