Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழந்தைகளை போட்டோ எடுக்காதிங்க...போட்டோகிராபரை தடுத்த சூர்யா...!

madhankumar August 10, 2022 & 19:08 [IST]
குழந்தைகளை போட்டோ எடுக்காதிங்க...போட்டோகிராபரை தடுத்த சூர்யா...!Representative Image.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளியான படம் "சூரரை போற்று" இந்த படம் தற்போது நடிகர் அக்சய் குமாரை வைத்து ஹிந்தியில் ரிமேக் செய்யப்பட்டு வருகிறது. இதனை நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார்.

அந்த படத்தின் வேலைகளை கவனிக்க நடிகர் சூரியாவும் ஜோதிகாவும் தனது குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோருடன் மும்பை சென்றிருந்தனர். அப்போது நடிகை நக்மா உள்ளிட்ட குடும்பத்தினருடன் இணைந்து ஹோட்டல் ஒன்றில் உணவருந்த சென்றுள்ளனர். இந்த செய்தி அறிந்த செய்தியாளர்கள் அந்த உணவகத்திற்கு வந்து புகைப்படம் எடுக்க தொடங்கினர். 

அப்போது நடிகர் சூரிய வெளியே வரும்போது புகைப்படம் எடுக்க தொடங்கினர், உடன் வந்த அவரது குழந்தைகளை எடுக்க முற்பட்ட போது குழந்தைகளை எடுக்க வேண்டாம் என கூறினார் அதற்கு சிலர் சரி என கூறி சூர்யாவை மட்டும் எடுத்தனர், ஆனால் ஒரு நபார்மட்டும் புகைப்படம் எடுத்துக்கொண்டே இருந்தார், அவரை தடுத்து நிறுத்தி புகைப்படம் எடுக்க வேண்டாம் என மற்றவர்களை காரில் ஏறும்படி கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்