Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நயன்தாரா படங்கள்.. இந்த வார தியேட்டர் சினிமா !

UDHAYA KUMAR Updated:
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நயன்தாரா படங்கள்.. இந்த வார தியேட்டர் சினிமா !Representative Image.

டிசம்பர் 2022, முதல் வாரம் ரிலீசாகவுள்ள திரைப்படங்களையும் அதன் சிறப்பு அம்சங்களையும் குறித்து இந்த பதிவில் காண்போம்.

DSP

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஜி.ஞானசம்பந்தன், புகழ், ஷிவானி நாராயணன் ஆகியோர் நடிப்பில் டி இமான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

நேர்மையான போலீஸ் அதிகாரியான வாஸ்கோடாகாமா, தன் தந்தையின் சொல்படி ஊரில் இருக்கும் ரவுடிகளையும் வில்லன்களையும் அழித்தொழித்து நகரத்தை பாதுகாப்பானதாகவும் அமைதியானதாகவும் மாற்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால் பகை அவரைத் துரத்த, அதை எதிர்த்து அடிக்கும் வழக்கமான கதையம்சம் கொண்ட திரைப்படம். 

மீண்டும் போலீஸ் அவதாரம் எடுத்துள்ளார் விஜய் சேதுபதி. இது ஒரு ஆக்ஷன் டிராமா என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. 

Gold

நேரம் படத்தைத் தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோன்னா செபஸ்டியன் என நட்சத்திர பட்டாளத்துடன் மிகவும் சிம்பிளாக வெளியான படம் பிரேமம். இதன் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன். இந்த படத்தைத் தொடர்ந்து 7 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகாத நிலையில், தற்போது வெளியாகியுள்ள படம் கோல்டு. 

பிரித்விராஜ் சுகுமாறன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் மலையாளம், தமிழ் என இருமொழிகளிலும் தயாராகியுள்ளது. இன்று மலையாளத்திலும் நாளை தமிழிலும் பெரும்பாலான திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

காமெடி திரில்லர் வகை திரைப்படமான இது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

Gatta Kusthi

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, முனீஸ் காந்த், காளி வெங்கட், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் டிசம்பர் 2 வெளியாகவுள்ளது. 

கபடி மற்றும் குஸ்தி செய்யும் வீரனாக விஷ்ணு விஷால், கலக்கியிருக்கிறார். இசை  ஜஸ்டின் பிரபாகர்

Therkathi Veeran

அறிமுக இயக்குநர் சாரத் இயக்கி அவரே நடித்துள்ள திரைப்படம் தெற்கத்தி வீரன். அவருக்கு ஜோடியாக அனகா நடித்துள்ளார். இவர்களுடன் அஷோக் குமார், வேல ராமமூர்த்தி, அனகா என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்