Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

புதிய போஸ்டர்.. பொங்கலுக்கு தரமான சம்பவம்.. தெறிக்கவிட்ட வாரிசு படக்குழு!!

Sekar Updated:
புதிய போஸ்டர்.. பொங்கலுக்கு தரமான சம்பவம்.. தெறிக்கவிட்ட வாரிசு படக்குழு!!Representative Image.

விஜய் நடிப்பில் தயாராகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தில் ராஜு தயாரிக்கிறார்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக தமன் இசையமைக்கிறார்.

படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில், பொங்கலுக்கு படம் வெளியாவதை உறுதிப்படுத்தும் வகையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்