Sat ,May 18, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57
Exclusive

Tamil TV Show Colors | போட்டிக்கு போட்டி: R U Ready? கலர்ஸ் தமிழில் ஒரு கலகலப்பான கேம் ஷோ!

Priyanka Hochumin April 04, 2022 & 16:15 [IST]
Tamil TV Show Colors | போட்டிக்கு போட்டி: R U Ready? கலர்ஸ் தமிழில் ஒரு கலகலப்பான கேம் ஷோ! Representative Image.

Tamil TV Show Colors: கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்தும் "போட்டிக்கு போட்டி: R U Ready" ஒரு புத்தம் புதிய கேம் ஷோ. உங்களை விடுமுறை நாட்களில் மகிழ்விக்க நேற்று முதல் தொடங்கப்பட்டது. 

சினிமா துறை எந்த அளவுக்கு உயர்ந்துள்ளதோ அதே அளவுக்கு டிவி ஷோக்களும் வளர்ந்து வருகிறது. மக்களின் தினசரி சலிப்பான வாழ்க்கையை மறந்து மனதார சிரிக்க டிவி சேனல்கள் வித்தியாசமாக நிறைய கேம் ஷோக்களை அறிமுகப்படுத்துகின்றனர். பெரும்பாலும் தமிழக மக்கள் அனைவருக்கு விஜய் டிவி மற்றும் சன் டிவி சேனல்கள் தான் அதிகம் தெரியும். ஆனால் தற்போது கலர்ஸ் தமிழ் மக்களின் மனதை விரைவாக கவர்ந்து வருகிறது. இந்த சேனலின் சீரியல்கள் ஜில்லுனு ஒரு காதல், அம்மன், இதயத்தை திருடாதே போன்ற ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி TRP-ல் முன்னிலையில் இருக்கிறது. இருப்பினும் இவர்கள் அறிமுகப்படுத்திய ஒரு புதிய கேம் ஷோ மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்ன சுவாரஸ்சியம் மற்றும் கலகலப்பு இந்த நிகழ்ச்சியில் இருக்குதுன்னு பார்ப்போம்.

                

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் | Colors Tamil Shows Online 

விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சியான "ஜோடி நம்பர் 1 சீசன் 5" இல் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நிகழ்ச்சியை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்துள்ளார். அதன் பிறகு கிரிக்கெட் தமிழ் தொகுப்பாளராக இருந்தார். மேலும் கலர்ஸ் தமிழின் சூப்பர் ஹிட் ஷோவான டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். தற்போது "போட்டிக்கு போட்டி: R U Ready" ஷோவை தொகுத்து மக்களை மகிழ்விக்க களமிறங்கியுள்ளார் பாவனா பாலகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 3, 2022 அன்று இரவு 7 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகியது. மேலும் கலர்ஸ் தமிழின் முன்னணி சீரியல் நட்சத்திரங்களுடன் வாரம் வாரம் சனி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. 

இதுல பாபா பாஸ்கர் என்ன பண்ண போறாரு? | Colors TV Show Tamil 

நடன துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிய உருவாக்கிய பாபா பாஸ்கர் மாஸ்டர் போட்டிக்கு போட்டி: R U Ready ஷோவில் சூப்பர் ஆடியன்ஸ் பொறுப்பில் செயல்படுகிறார். அப்படினா என்ன? புதுசா இருக்கே! இது எந்த அணி வெற்றி பெறுகிறது என்று மக்களின் வாக்குகளோடு முடிவு செய்யப்படுகிறது. அந்த வாக்குகளுடன் பாபா பாஸ்கர் அவர்களின் வாக்கும் சேர்த்து கணக்கிடப்படும். 

குழுவாக பிரியும் கலர்ஸ் தமிழ் சீரியல்கள் | Tamil TV Show Colors 

மக்களை குதூகலமாக நிகழ்ச்சியை பார்க்க வைக்க இரண்டு குழுக்களாக பிரிக்கப்படுகிறது கலர்ஸ் தமிழ் சீரியல் தொடர்கள். குழு A-வில் சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், வள்ளி திருமணம் மற்றும் இதயத்தை திருடாதே நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். குழு B-வில் இது சொல்ல மறந்த கதை, அம்மன் 3, நம்ம மதுரை சிஸ்டர்ஸ் மற்றும் மீரா ஆகிய நெடுந்தொடர்களின் நட்சத்திரங்கள் இடம்பெறுகின்றனர்.

               

சுழற்சியில் போட்டிகள் தேர்வு | Colors Tamil Shows Online 

எந்த வகையான போட்டிகள் நடைபெறும் என்பதை சுழல்கின்ற ஒரு இயந்திரம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். அதன் பிறகு குறிப்பிட்ட டாஸ்க்கை அந்தந்த அணியினர் செய்து காட்ட வேண்டும். அதனை ஆடல், பாடல் போன்ற கலாட்டா விஷயங்களுடன் நடைபெறும். Non-stop fun-க்கு கேரண்டி, இந்த போட்டிக்கு போட்டி: R U Ready? ஷோ. இந்த நிகழ்ச்சியை பற்றி பாபா பாஸ்கர் மாஸ்டரின் கருது, " இதுபோன்ற புத்தம் புதிய கேம் ஷோவில் நானும் ஒரு பாகமாக இருப்பது பெரும் மகிழ்ச்சி. மக்களை தினமும் என்டர்டெயின் செய்து வரும் இது போன்ற முன்னணி நட்சத்திரங்களோடு இந்த பயணத்தை மேற்கொள்வதில் எனக்கு தீராத ஆனந்தத்தை அளிக்கிறது. இனி வரவிருக்கும் வாரங்களில் எவ்வகையான போட்டிகள் நடைபெறும் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன். 

ஆகவே மக்களே! இனி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 7 மணிக்கு மறக்காமல் "போட்டிக்கு போட்டி: R U Ready?" நிகழ்ச்சியை பார்த்து மகிழுங்கள். மேலும் எந்த நேரமும் இந்த நிகழ்ச்சியை பார்க்க VOOT ஆப்பை டவுன்லோட் செய்து பாருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்