Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Thalaivar 170 ரஜினியை இயக்கப்போகும் டான் இயக்குநர்! தர்பாருக்கு பின் லைகா?

UDHAYAKUMAR August 26, 2022 & 18:00 [IST]
Thalaivar 170 ரஜினியை இயக்கப்போகும் டான் இயக்குநர்! தர்பாருக்கு பின் லைகா?Representative Image.

ரஜினிகாந்தின் அடுத்த படமான தலைவர் 170 ஐ இயக்க சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. கிட்டத்தட்ட அவர்தான் இயக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் விரைவில் நெல்சன் படத்தை முடித்துக் கொண்டு டான் சிபி படத்துக்கு கால்ஷீட் கொடுப்பார் என கூறப்படுகிறது.

70 வயதைக் கடந்துவிட்டாலும் ரஜினிகாந்த் மனதளவில் இன்னமும் இளமையாகத்தான் இருக்கிறார். அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அண்ணாத்த தான் கடைசி படம் என நினைத்தால் அடுத்து ஜெயிலர், சரி இத்துடன் ஓய்வெடுப்பார் என நினைத்தால் அடுத்து டான் சிபி சக்ரவர்த்தி படத்துக்கு ஓகே சொல்லியுள்ளார். 

ரஜினிகாந்த் இன்னும் 5 வருடங்களில் 5 படங்கள் பண்ணினாலும் ஆச்சர்யமில்லை. காரணம் அவர் இன்னமும் மனதளவில் இளமையாகத்தான் இருக்கிறார். ஆனால்.... அவர் வயதும் உடல்நிலையும் ஒத்துழைக்குமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சிபி சக்ரவர்த்தியுடன் ரகசியமாக சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதில் அடுத்த படத்தை அவருக்கு கொடுப்பது என ரஜினி தரப்பு முடிவு செய்துள்ளது. தர்பார் தோல்விக்காக லைகா தயாரிப்பில் அடுத்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். 

லைகாவின் முந்தைய படத்தை டான் சிபி சக்ரவர்த்தி இயக்கியிருந்ததால், அதுவும் 100 கோடி கிளப் வெற்றிப்படமாக அமைந்ததால், அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்