Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டிசம்பரில் தளபதி 67 ஸ்டார்ட்! வேற லெவல் அப்டேட்!

UDHAYAKUMAR August 09, 2022 & 15:10 [IST]
டிசம்பரில் தளபதி 67 ஸ்டார்ட்! வேற லெவல் அப்டேட்!Representative Image.

தளபதி 67 படம் வரும் டிசம்பர் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  வாரிசு படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து 1 மாத காலத்துக்குப் பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைவார் எனவும் கூறப்படுகிறது. 

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தை தில் ராஜூ தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது. 50 சதவிகிதம் படம் சென்னையில் படம்பிடிக்கப்படும் எனவும் மிச்சம் ஆந்திர, தெலுங்கானா மாநில நகரங்களில் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டிருந்த நிலையில், விரைவில் சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு துவங்கும் என்கிறார்கள். 

வாரிசு படத்தைத் தொடர்ந்து செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 15 அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்தில் வெளியாகலாம். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தின் கதை கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் விஜய் இருக்கிறாராம். வரும் டிசம்பர் 2வது அல்லது 3வது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கும் என கூறுகிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்