Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமல்ஹாசனுடன் இணையும் கார்த்திக்! வேற லெவல்தான் போங்க...!

UDHAYAKUMAR August 09, 2022 & 11:00 [IST]
கமல்ஹாசனுடன் இணையும் கார்த்திக்! வேற லெவல்தான் போங்க...!Representative Image.

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. 

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் புதிய படம் இந்தியன் 2. கடந்த 4 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் இந்த படம் அவ்வப்போது துவங்கி ஏதோ ஒரு தடையால் நின்றுவிடுகிறது. இந்நிலையில் இந்த வருடம் நிச்சயமாக துவங்கும் என நடிகரும் அரசியல் கட்சி பிரமுகருமான உதயநிதி ஸ்டாலின் சிவகார்த்திகேயனின் டான் திரைப்பட விழாவில் கூறியிருந்தார். 

லைகா தயாரிப்பில் இந்தியன் 2 திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் துவங்கும் எனவும் அதனை மேற்கொண்டு உதயநிதி தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்த நிலையில், இந்த படத்தில் சிபிஐ அதிகாரி வேடத்தில் கார்த்திக் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு சுமூக உடன்பாடு ஏற்பட்டு அவர் ஒப்பந்தம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக பிரகாசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்தியன் 2 படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில் கார்த்திக்கும் உடன் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்