Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 தொடங்கியது! வேற லெவலுக்கு கிடைத்த அப்டேட்...!

UDHAYAKUMAR August 15, 2022 & 12:36 [IST]
தளபதி 67 தொடங்கியது! வேற லெவலுக்கு கிடைத்த அப்டேட்...!Representative Image.

விக்ரம் திரைப்படத்தைத் தொடர்ந்து தளபதி 67 படத்தை தொடங்கியுள்ளா் லோகேஷ் கனகராஜ். இதுகுறித்த அப்டேட் ஒன்று அரசல் புரசலாக வெளிவந்துள்ளது. இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் என்பதை லோகேஷ் கனகராஜின் நண்பரும்  வளர்ந்து வரும் பிரபல இயக்குநரான ரத்னகுமார் குறிப்பால் உணர்த்தியுள்ளார். 

தளபதி 67 படத்தின் படப்பிடிப்புக்காக சில இடங்களைத் தேர்வு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். வழக்கம்போல நைட் எஃபக்ட் நிறைந்த காட்சிகள் இருப்பதால் நிலக்கரி சுரங்கம், பாலைவனம், செம்மண் மேடு போன்ற பயங்கரமான இடங்களைத் தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில வாரங்களாக படத்தின் ஸ்கிரிப்ட் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த லோகேஷ் கனகராஜ், இடையில் ஒரு மாறுதலுக்காக லொகேஷன் பார்க்க சென்றுள்ளார். அப்படியே கதையை இம்ப்ரூவைஸ் செய்வது, வசனங்களை மேம்படுத்துவது என தனது நண்பர் ரத்னகுமாரிடம் சேர்ந்து பணியாற்றி வருவதாக தகவல். ரத்னகுமாரும் தனது குலு குலு படத்தை முடித்துவிட்டு இப்போது லோகேஷுடன் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை உண்மை என நிரூபிக்கும் வகையில் லோகேஷுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். 

முன்னதாக ஆகஸ்ட் 15ம் தேதி தளபதி 67 குறித்த அப்டேட் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்