Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓடிடி இந்த வாரம்....! மூன்று படங்கள் காத்திருக்கு!

UDHAYAKUMAR August 13, 2022 & 18:25 [IST]
ஓடிடி இந்த வாரம்....! மூன்று படங்கள் காத்திருக்கு!Representative Image.

திரையரங்குகளில் திரைப்படங்களை ரசித்து பார்த்த காலம் கொஞ்சம் கடந்து போயுள்ளதோ என எண்ணத் தோன்றுகிறது. படம் திரையரங்குகளில் வெளியானாலும் ரெண்டு மூனு வாரத்தில் வீட்டிலேயே பாக்கலாமே என்கிற எண்ணம் தலைதூக்கியுள்ளது.  கமல்ஹாசனின் விக்ரம் படம் மட்டுமே அதில் விதிவிலக்கும். ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டரில் கூட்டம் அள்ளியது. 

ரசிகர்களும் ஓடிடியில் என்ன படங்கள் வெளியாகியுள்ளது என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் இன்று வெளியாகியுள்ள 3 திரைப்படங்கள் பற்றி இப்போது பார்க்கலாம் 

காடவர் 

அமலாபால் தயாரித்து நடித்திருக்கும் காடவர் திரைப்படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.  சில வருடங்களாக வேறெந்த படத்திலும் நடிக்காத அமலாபால் இந்த படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.  படம் அட்டகாசமாக இருக்கிறது எனும்படியாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. 

எமோஜி

மஹத் ராகவேந்திரா, தீபிகா சதீஷ், மானசா சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் எமோஜி. உணர்ச்சிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

டே ஷிஃப்ட்

ஜேஜே பெர்ரி இயக்கத்தில் ஜேமி ஃபாக்ஸ் நடித்துள்ள படம் டே ஷிஃப்ட். நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்