Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தி கிரே மேன் இரண்டாம் பாகத்தில் தனுஷ்...? வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு...!

madhankumar July 27, 2022 & 11:50 [IST]
தி கிரே மேன் இரண்டாம் பாகத்தில் தனுஷ்...? வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு...!Representative Image.

ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் (ஜோ ஜூஸோ மற்றும் ஆண்டனி) ஆகியோர் இயக்கத்தில், ஹாலிவுட்டில் முன்னணி நட்சத்திரங்களான, ரியான் காஸ்லிங், கிறிஸ் எவான்ஸ், அனா டி அர்மாஸ், ஆகியோர் உடன் இணைந்து நடிகர் தனுஷ் இணைந்து நடித்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான படம் "தி கிரே மேன்". 

இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, எழுத்தாளர் மார்க் கிரேனி எழுதிய தி கிரே மேன் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் தனுஷின் LONE WOLF கதாபாத்திரம் அவரை மனதில் வைத்துக்கொண்டுதான் எழுதினோம் என இயக்குனர்கள் பல நேர்காணல்களில் தெரிவித்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் இந்த படத்தை பார்த்தவர்கள் "தமிழ் நடிகர் தனுஷ் மிக குறுகிய நேரம் இந்த படத்தில் வந்தாலும் கூட அவர்தான் அதிகமாக ஸ்கோர் செய்துள்ளார், அவரின் நடிப்பு அசாத்தியமானது என அனைவரும் புகழ்ந்துவருகின்றனர்".

இந்த படம் முடியும் பொது அடுத்த பாகம் வருவது போன்றே முடிக்கப்பட்டிருக்கும் அந்த வகையில் "தி கிரே மேன்" பாகம் ஒன்றை 200 மில்லியன் பட்ஜெட்டில் தயாரித்த நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் தற்போது தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த படத்தில் இயக்குனர்களாக ஜோ ரூசோ மற்றும் ஆண்டனி ரூசோ ஆகியோர் தொடர்வார்கள், மற்றும் இணை எழுத்தாளராக ஸ்டீபன் மெக்ஃபீலி இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரமாக ரியான் காஸ்லிங் நடிக்கவுள்ளார்.

மேலும் தி கிரே மேன் படத்தில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் ஸ்பின் ஆப், அதாவது ஒரு முக்கிய கதாபாத்திரத்தை மட்டும் வைத்து புதிய படம் ஒன்றை எடுப்பதற்கான வேலையும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்னதாக இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் மிகவும் வலிமையானது, தி கிரே மேன் வெளியீட்டுக்கு பின்னர் அதற்க்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவரின் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என கூறியிருந்தனர்.

இந்நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ள நிலையில் அந்த ஸ்பின் ஆப் புதிய படத்தில் நடிகர் தனுஷை வைத்து முழுநீள படம் எடுங்கள் என அவரது தீவிர ரசிகர்கள் ட்விட்டரில் கோரிக்கை வைத்துவருகின்றனர். அனால் சிலை இது கிரிஷ் எவான்ஸ் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து தனி படமாக எடுக்கப்படலாம் என கூறிவருகின்றனர். எப்படி இருந்தாலும் தனுஷ் கதாபாத்திரம் இன்னும் உயிரோடு தான் இருக்கிறது எனவே தி கிரே மேன் இரண்டாம் பாகத்தில் அவர் வர வாய்ப்புகள் உள்ளது. அப்படி இல்லையென்றாலும் கிரிஷ் ஏவான்ஸை வைத்து தனி படம் எடுத்தாலும் அதிலும் தனுஷ் வர வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்