Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

Thendral Vandhu Ennai Thodum Today Episode: திருமணத்தை அதிரடியாக நிறுத்திய வெற்றி...ஊருக்கு முன்பு அபியிடம் லவ் சொல்லி நாம் எதிர்பார்த்ததை செய்து விட்டார்!

Priyanka Hochumin July 06, 2022 & 13:45 [IST]
Thendral Vandhu Ennai Thodum Today Episode: திருமணத்தை அதிரடியாக நிறுத்திய வெற்றி...ஊருக்கு முன்பு அபியிடம் லவ் சொல்லி நாம் எதிர்பார்த்ததை செய்து விட்டார்!Representative Image.

Thendral Vandhu Ennai Thodum Today Episode: ஒரு மாதமாக நாம் எதிர்பார்த்த அந்த நாள் இது தான். வெற்றி அபி கிட்ட எப்படி லவ் சொன்னாரு தெரியுமா?

நேற்றைய எபிசோடு | Vijay TV Latest Promo 

இப்படி ஒரு சம்பவம் வேற எந்த சீரியலையாவது நடந்திருக்கா சொல்லுங்க? இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சி போய் இவங்க குடும்பம் இவங்களுக்கு வேற கல்யாணம் ஏற்பாடு செய்றாங்க. இதுல ஹை லைட் என்னென்ன ரெண்டு பேத்துக்கும் ஒரே கோவில்ல வேற வேற ஆளுங்க கூட கல்யாணம் நடக்குதாம் எப்டி. இதையெல்லாம் பாக்கிறது இல்ல கேக்குறதுக்கே கடுப்ப இருக்குதா இல்லையா? இருந்தாலும் சரி வேற என்ன பண்றது என்ன நடந்துச்சுன்னு பாப்போம்.

நேத்து அபிக்கும் சக்திக்கும் கல்யாண சடங்கு பண்ண, சக்தி வெற்றியோடு அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்து பண்ண வைக்கிறான். என்ன ஒரு எகத்தாளம்! அவங்களும் அதையெல்லாம் பங்கிட்டு ஸ்லோ மோஷன்ல போறாங்க. அங்க ராதா அம்மா பயங்கர கண்டிஷன் போட்டுட்டு இருக்காங்க. ஒரு வழியா இப்ப தான் மணமேடைக்கு வந்துருக்காங்க ரெண்டு ஜோடியும். கடைசியா அபி சக்தி கல்யாணத்துல அர்ச்சனை கொடுக்குறதோட முடிஞ்சது.

இன்றைய எபிசோடு | Thendral Vanthu Ennai Thodum Serial

அங்க எப்படியும் அபி வீட்ல எடுத்து கொடுத்த வேஷ்டி சட்டன்னு ராதாவோட அம்மாக்கு தெரிஞ்சிடுச்சு. அதுனால் அவங்க புது பட்டு வேஷ்டி சட்ட எடுத்து கொடுத்து மாத்திட்டு வர சொல்லறீங்க. அங்க போனா வெற்றியோட மனசாட்சி மறுபடியும் வந்தாச்சு. இப்ப அவங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல நடக்குற விவாதம். என்னால எதுவும் முடியல, ஏன் பெத்தவங்க இப்படி இருக்காங்க. இங்க எங்க அம்மா அங்க அவ அப்பா இவங்க எல்லாம் சேர்ந்து எங்கள வாழ விடமாடீங்கிறாங்க என்று புலம்புகிறான் வெற்றி. இப்ப மனசாட்சி, டேய் அவ யாரு உன் பொண்டாட்டி தான நீ வந்து கூப்புடுவன்னு நம்பிக்கையோட காத்துட்டு இருக்கா அவ நம்பிக்கையை மட்டும் நீ ஒடச்ச சாத்தியமா நீ நல்லாவே இருக்க மாட்ட என்று கூறியது. எனக்கு ஒரே பயமா இருக்குடா என்கிறான் வெற்றி. என்னடா உன்னைய கத்தியால குத்துனப்ப, மத்தவங்க உன்னைய அடிச்சப்ப இல்லாத பயம் உன் பொண்டாட்டிய கூப்பிட்றதுக்கு எதுக்கு பயம் வார்த்து என்று கேட்கிறது. இப்ப ஒரு முடிவெடுத்து செல்கிறான் வெற்றி.

அங்க கரெக்ட்டா சக்தி அபிக்கு தாலி கட்டும் சமயத்தில் 'நிறுத்துங்க' என்று ஒரு குரல் சத்தமா கேட்குது. அதன் வெற்றி, இங்க இப்படி ஒரு அநியாயம் நடக்குது யாருமே கேள்வி கேட்க மாட்டிங்களா என்கிறான். சக்தி தாலி கட்டப்போறது என்னோட பொண்டாட்டிக்கு இது எப்படி நடக்கும் என்று சொன்னதும் சக்திக்கு ஒரே ஷாக். சார்-க்கு இப்ப தான் மேட்டரே தெரியுது. அப்புறம் வெற்றி அபிய பாத்து, என்ன மன்னிச்சிரு டி நீ இல்லாம நான் செத்துர மாட்டேனா. இப்பவே என்னால சக்தி கூட உன்னைய இந்த கோலத்துல பாக்க முடில டி. எனக்கு எப்படி வேணாலும் தண்டனை கொடு ஆனா இப்படி ஒரு தண்டனைய மட்டும் தராத என்று கெஞ்சிக்கிறான். இப்ப சொல்றேன் டி, நான் உன்ன மட்டும் தான் காதலிக்கிறேன். நீ என்னோட ரத்த, சதை, மூச்சு, உடம் முழுக்க நீ மட்டும் தான் டி இருக்க. ப்ளீஸ் டி என்ன மன்னிச்சிரு என்றது அபிக்கு ஏற்படும் அந்த சந்தோசம் இருக்கே அதை சொல்ல வார்த்தைகள் இல்ல.

நடுவுல சூர்யா வந்து மேட்டர டைவர்ட் பண்ண பாத்தாப்புல ஆனா ஒன்னும் வேளைக்கு ஆவல. கடைசியா இப்ப எப்படி நிக்குதுன்னா, நீ தான் ஒட்டும் வேணாம் உறவும் வேணாம்னு எழுத்து வாங்கிடல்ல இப்ப இங்க வந்து கலாட்டா பன்னிட்டு இருக்கியான்னு வெற்றிய பாத்து சூர்யா கேக்குறான். நீங்க எதுக்கும் சொல்லாதீங்க, அபி என் பொண்டாட்டி சொல்லட்டும் நா இங்க இருந்து போறேன் என்று வெற்றி சொல்றான். இதற்கான பதில் என்னென்னு நமக்கு நல்லாவே தெரியும் பட் இதோட இன்றைய எபிசோடு முடுவுக்கு வருகிறது.

Thendral vanthu ennai thodum serial, thendral vanthu ennai thodum today episode, thendral vanthu ennai thodum episodes, vijay tv latest promo, thendral vanthu ennai thodum latest promo, 

உடனுக்குடன் செய்திகளை (Serial Update) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்