Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 73,898.31
-107.63sensex(-0.15%)
நிஃப்டி22,481.10
-20.90sensex(-0.09%)
USD
81.57
Exclusive

மணிஹெய்ஸ்ட்டும் துணிவும்.... சூப்பர் ப்ளான் போட்ட நெட்பிளிக்ஸ்...!

UDHAYA KUMAR Updated:
மணிஹெய்ஸ்ட்டும் துணிவும்.... சூப்பர் ப்ளான் போட்ட நெட்பிளிக்ஸ்...!Representative Image.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படத்தின் ஓடிடி உரிமையைப் பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப்படுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் காணப்படுகிறார்கள். 

நெட்பிளிக்ஸில் மிகப் பெரிய அளவில் உலகம் முழுக்க ஹிட்டான இணையத் தொடர் மணி ஹெய்ஸ்ட். இந்த தொடரில் நடித்தவர்களை உலகம் முழுக்க மக்கள் கொண்டாடினர். இந்த தொடரின் கதையே வங்கியைக் கொள்ளையடிக்கும் கும்பலை ஒட்டியது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் துணிவு படத்தை வாங்கியிருப்பதன் பின்னணியிலும் இதுதான் இருப்பதாக கூறப்படுகிறது. 

துணிவு படத்தின் கதை வங்கிக் கொள்ளை என்பதாலும் ஹெச் வினோத் இந்த படத்தை அப்படி பார்த்து பார்த்து செதுக்கியிருப்பதாலும் நெட்பிளிக்ஸ் தரப்பினர் இந்த படத்தை பாராட்டியுள்ளனராம். மணிஹெய்ஸ்ட் சீரிஸ் போல இருப்பதாகவும் நல்ல விறுவிறுப்பான திரைக்கதை எனவும் கூறி பாராட்டியதாகவும் கூறுகிறார்கள் நெருங்கிய வட்டாரத்தினர். இதனால் மணி ஹெய்ஸ்ட் மாதிரியே விறுவிறுப்பாக துணிவு படம் அமைந்திருப்பதை எண்ணி அஜித் ரசிகர்கள் உற்சாக மடைந்துள்ளனர். 

உலகம் முழுக்க வரும் நாட்களில் விளம்பரங்கள் பிய்த்துக்கொள்ளப் போகிறது என்கிறார்கள். இப்போது துபாயில் வெளியிட்ட விளம்பரத்தைப் போல , மிகப் பிரம்மாண்டமாக புர்ஜ் கலீஃபாவில் டிரைலர் ரிலீஸ் செய்ய ஏற்பாடு நடந்துவருகிறதாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்