Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமலுடன் மோதும் நிவின்பாலி! கேரளாவில் யார் கெத்துனு பாத்துடலாம்!

UDHAYA KUMAR May 14, 2022 & 14:42 [IST]
கமலுடன் மோதும் நிவின்பாலி! கேரளாவில் யார் கெத்துனு பாத்துடலாம்!Representative Image.

பிரபல மலையாள சினிமா நடிகர் நிவின் பாலி நடிப்பில் இயக்குநர் ராஜீவ் ரவியின் துறமுகம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகம் பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதையான துறமுகம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

துறமுகம் படத்தில் நிவின்பாலி, நிமிஷா சஜயன், ஜோஜு ஜார்ஜ், இந்திரஜித் சுகுமாறன்  ஆகியோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே வெளியாகவேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக திட்டமிட்டப்படி வெளியாக முடியவில்லை.  இந்நிலையில், வரும் ஜூன் 3ம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதேநாளில்தான், கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படமும் ரிலீஸாகவுள்ளது. கேரளாவிலும் கமல்ஹாசனுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதால், எந்த படத்துக்கு அதிக ரசிகர்கள் வருவார்கள் என போட்டி சூழல் உருவாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்