Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

"வாத்தி" கம்மிங்...தனுஷ் ரசிகர்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்க..!

madhankumar July 25, 2022 & 17:15 [IST]
Representative Image.

நடிகர் தனுஷ் ஹாலிவுட் நடிகர்கள் கிறிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லிங் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள படம் "தி கிரே மேன்" இந்த படத்தை ரூசோ பிரதர்ஸ் இயக்கியிருந்தனர். ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்த இந்த படத்தை பார்த்த பலர் தனுஷின் நடிப்பு நன்றாக இருந்தது, ஒரு சில காட்சிகளில் மட்டும் வந்திருந்தாலும் ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார் என புகழ்ந்து தள்ளினார்.

இந்த ஜூலை 28 ஆம் தேதி நடிகர் தனுஷ் தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவர் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கி வரும் "வாத்தி" படத்தில் பாஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூலை 27 ஆம் தேதியும் படத்தில் டீசர் ஜூலை 28 அன்றும் வெளியாகும் என தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனுஷ் ரசிகர்களும் அடுத்தடுத்து அப்டேட் கிடைத்துக்கொண்டே இருக்கிறது என மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர், கடந்த ஒரு மாத காலமாக ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் நடைக்கும் படத்தில் ஹாஸ்டகுகளை ட்ரென்ட் செய்துவருகின்றனர். தனுஷ் இது தவிர அவரது அண்ணன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" படத்திலும் நடித்து முடித்துள்ளார். அந்த படம் குறித்த அப்டேட்டும் வெளியாகலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்