Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐந்து நாட்களில் 150 கோடி! வசூல் அள்ளும் வாரிசு!

UDHAYA KUMAR Updated:
ஐந்து நாட்களில் 150 கோடி! வசூல் அள்ளும் வாரிசு!Representative Image.

வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் வாரிசு. பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த வாரிசு தற்போது வரை 150 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 11ம் தேதி வெளியான வாரிசு திரைப்படம் நேற்று வரை 5 நாட்கள் ஓடியுள்ளது. இன்றும் பெருவாரியான திரையரங்குகளில் ஹவுஸ்புஃல்லாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில், கடந்த 5 நாட்களில் 150 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருப்பது தெரியவந்துள்ளது.  வாரிசுடன் துணிவு படமும் வெளியாகியிருப்பதால், இந்த வசூல் கொஞ்சம் குறைவானதாக பார்க்கப்படுகிறது. 

280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இப்போதைக்கு சாட்டிலைட் உரிமை, டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமை என சேர்த்து முதலுக்கு மோசம் இல்லாமல் தப்பித்துள்ளது. ஆனாலும் பெரிய அளவிலான வெற்றியை எதிர்பார்த்த படக்குழுவினருக்கு இது ஏமாற்றமாகவே இருக்கிறது. 

வாரிசுவின் தெலுங்கு பதிப்பான வாரசுடுவும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றாலும் அங்கும் தெலுங்கு நேரடி படங்கள் வெளியாகியிருப்பதால் போட்டி அதிகரித்திருந்த நிலையில், பெரிய அளவிலான வசூலைக் குவிக்க முடியாமல் திணறி வருகிறது வாரிசு படம். 

ஆனால் நிச்சயம் லாபம் ஈட்டித்தரும் படமாக அமையும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்