Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சீரியல்னா சும்மாவா.. கொந்தளித்த வம்சி... கலாய்க்கும் நெட்டிசன்கள்!

UDHAYA KUMAR Updated:
சீரியல்னா சும்மாவா.. கொந்தளித்த வம்சி... கலாய்க்கும் நெட்டிசன்கள்!Representative Image.

என்னங்க சீரியல்.. சீரியல்னா இலக்காரமா போச்சா. அதுவும் ஹார்ட் ஒர்க் தான என கோபத்தில் பேசிய வம்சியால், ரசிகர்களுக்கு நிறைய கண்டென்ட் கிடைத்திருக்கிறது. மக்களை குறை சொல்கிறார் என வம்சியை பலரும் கலாய்த்து வருகின்றனர். 

வாரிசு படம் தொடர்பான விமர்சனங்களுக்கு பதில் கூறும் விதமாக பேசிய வம்சி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசியது வைரலாகி வருகிறது. படத்தை சீரியல் என கிண்டல் செய்கிறார்கள் சீரியல் என்ன சும்மாவா. அவர்களும் ஹார்டு ஒர்க் செய்கிறார்கள் தானே என்று கூறியுள்ளார். படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று வாரிசு இயக்குநர் வம்சி விமர்சகர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். 

குடும்பங்கள் கொண்டாடும் படமாக விமர்சகர்களின் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் 210 கோடி வசூலை எட்டியுள்ளது. ஆனாலும் பலர் இந்த படத்தைப் பற்றிய எதிர்மறை கருத்துகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றனர். இதனால் இயக்குநர் வம்சி கொஞ்சம் ஷாக் ஆகிவிட்டார் போல. 

பிரபல யூடியூப் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வம்சி கொஞ்சம் கோபத்தில் கொந்தளித்துள்ளார். வசூலில் வெற்றி பெற்ற வாரிசு விமர்சகர்களிடம் பயங்கர அடி வாங்கியுள்ளது. அரைத்த மாவை அரைக்கு சீரியல் போல எடுக்கிறார்கள் என வீடியோ போடுகிறார்கள். சீரியலை ஏன் குறைத்து மதிப்பிடுகிறார்கள். அதுவும் கிரியேட்டிவ் ஜாப் தான். படத்தை ஆராய்யுங்கள் ஆனால் மட்டம் தட்டாதீர்கள். நான் கமெர்ஷியல் படம்தான் செய்தேன். அது ஆடியன்ஸின் பொழுதுபோக்குக்கான படம் என கூறியுள்ளார். 

பதிலுக்கு நெட்டிசன்களும், விமர்சகர்களும் நல்ல படங்களை மக்கள் வெற்றி பெற வைக்கின்றனர். ஆனால் இதுபோல படத்தை எடுத்து வைத்துக்கொண்டு ஏதோ தியாகம் செய்தது போல பேசுவது தவறு. மக்களும் தங்களின் உழைப்புக்கு கிடைத்த கூலியான காசைத் தான் படங்களுக்கு தருகிறார்கள். அவர்களின் வியர்வைதான் காசாக மாறுகிறது. அவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என கூறியுள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்