Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெந்து தணிந்தது காடு இசை வெளியீடு! கலக்க வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்...!

Udhaya Kumar July 05, 2022 & 16:29 [IST]
வெந்து தணிந்தது காடு இசை வெளியீடு! கலக்க வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான்...!Representative Image.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக சித்தி இதானி, காயாடு லோஹர், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

சிம்புவின் மாநாடு திரைப்பட வெற்றிக்கு பிறகு வரும் படம் என்பதால் இந்த படத்தை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்த படக்குழு வரும் ஆகஸ்ட் 18ம் தேதி ரிலீஸ் செய்யலாம் என யோசனையில் இருந்துள்ளது. பின்னர் தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படமும் அன்றுதான் வெளியாகவுள்ளதை அறிந்து பின்வாங்க முடிவு செய்துள்ளனர். சன்பிக்சர்ஸ் தயாரிப்பு மற்றும் உதயநிதி வெளியீடு என்பதால், ஏற்கனவே அண்ணாத்த படத்துக்கு பட்ட சூடு தெரிந்தே இதனை எடுத்திருப்பார்கள் என தோன்றுகிறது. 

ஆகஸ்ட் 31ம் தேதி இந்த படத்தை வெளியிடுவது என யோசித்தால் அன்று கார்த்தி நடிப்பில் விருமன் திரைப்படமும் இன்னும் சில திரைப்படங்களும் வர இருப்பதாக தெரிந்து, செப்டம்பருக்கு ஜம்ப் அடித்துள்ளது படக்குழு. அதுமட்டுமின்றி அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம்தான் கார்த்தியின் விருமன், சிம்புவின் வெந்து தணிந்தது காடு இரண்டு படங்களையும் வாங்கியுள்ளது. அதனால் அவர்களே தாமதித்து ரிலீஸ் செய்ய கேட்டிருக்கிறார்களாம். 

செப்டம்பர் 15ம் தேதி பட ரிலீஸ் இருப்பதால் செப்டம்பர் 7 அல்லது 8ம் தேதி இசை வெளியீடு நடத்தவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பல்லாவரத்தில் இருக்கும் வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறுகிறது இசை வெளியீட்டு நிகழ்ச்சி. நிச்சயமாக இந்த இசை விழாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்