Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பழம்பெரும் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!!

Sekar Updated:
பழம்பெரும் நடிகர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்!!Representative Image.

பழம்பெரும் நடிகர் சலபதி ராவ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78. சலபதி ராவ் தெலுங்கு சினிமாவில் நகைச்சுவை மற்றும் வில்லன் பாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர் மற்றும் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் பலிப்பரூரைச் சேர்ந்தவர் சலபதி ராவ். இவர் சாக்ஷி (1966), டிரைவர் ராமுடு (1979), வஜ்ரம் (1995), மற்றும் பாலிவுட் திரைப்படமான கிக் (2009) உட்பட எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மிகவும் வரவேற்பை பெற்ற அருந்ததி திரைப்படத்திலும், இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரது மரணம் குறித்த செய்தி வெளியான பிறகு, திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சலபதி ராவிற்கு இந்துமதி என்ற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். மூன்று குழந்தைகளில் ஒருவரான மகன் ரவி பாபுவும் தெலுங்கு சினிமாவில் நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளராக உள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்