தளபதி விஜய் நேற்று திடீரென தெலுங்கானா முதல்வரை சந்தித்து பேசினார். மீடியா அனைத்திலும் இந்த விசயம்தான் டாக் ஆஃப் தி ஷோ என்பது போல பற்றி எரிந்தது. என்னவாக இருக்கும். எதற்காக சந்தித்தார் என பலரும் குழம்பியுள்ள நிலையில், அது வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என தகவல் வந்தது. நாமெல்லாம் யாரு.. உண்மையிலேயே மரியாதை நிமித்தமான சந்திப்புதானா? அதெப்படி விசயம் இல்லாமல் இருவர் சந்திப்பாங்க என ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டனர். உண்மையில் விசயமே இல்லாமல்தான் தளபதி விஜய், தெலுங்கானா முதல்வரை சந்தித்தாரா?
பீஸ்ட் திரைப்படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. இதுவரை தளபதி 66 எனும் பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது இந்த படம். இந்த படத்துக்கான டைட்டிலையும் தயார் செய்யும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாம். உதவி இயக்குநர்கள் நல்ல டைட்டில் வைப்பதற்காக ஆலோசித்து வருகின்றனராம்.
ஏற்கனவே முதல் கட்டப் படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டதாம். இந்நிலையில் இரண்டாவது கட்டமாக ஹைதராபாத்தில் படத்தின் பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் விஜய்யும் ரஷ்மிகா பயங்கரமாக ஆட்டம் போடும் வகையிலான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றனவாம். பாடலை இயக்குபவர் நம்ம பிரபுதேவா என்பதால் மிகவும் ஹெவி ஸ்டெப்ஸ் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில்தான் நேற்று திடீரென்று செய்திகளில் விஜய்யின் பெயர் அடிபட்டது. தெலுங்கு செய்தி சேனல்களில் முதல்வரை சந்தித்தார் விஜய் என தகவல் பரவியதால், என்ன நடக்கிறது என விசாரிக்க தமிழ் ஊடகங்களும் முதல்வர் அலுவலகம் வரை படையெடுத்துச் சென்றன. கடைசியில் இது வெறும் சம்பிரதாய சந்திப்பு என கூறி முடித்து வைத்துவிட்டனர். ஆனால், இது வரி தொடர்பான சந்திப்பு என தகவல் கசிந்துள்ளது. எனினும் இது என்ன காரணம் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை
தளபதி 66 படத்தில் சரத்குமார். பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தமன் இசையில் 6 பாடல்கள் தெறிக்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.
KEYWORDS:
vijay 66 heroine latest update
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…