Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

kaithi russia release date ரஷ்ய மொழியில் வெளியான கைதி திரைப்படம் - இத்தனை தியேட்டர்களா?

UDHAYA KUMAR May 19, 2022 & 10:49 [IST]
kaithi russia release date ரஷ்ய மொழியில் வெளியான கைதி திரைப்படம் - இத்தனை தியேட்டர்களா?Representative Image.

kaithi russia release date லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற கைதி திரைப்படம் ரஷ்ய மொழியில் இன்று வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் கைதி.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் மோதி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றதுடன் ரசிகர்கள் கொண்டாடும் படமாகவும் அமைந்தது. 

இந்த படத்தின் மேக்கிங், இசை, கார்த்தியின் நடிப்பு, சண்டைக் காட்சிகள் உள்ளிட்ட பல விசயங்கள் பாராட்டப்பட்டன.  இப்போது இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அஜய் தேவ்கன் கார்த்தி வேடத்தில் நடிக்கவுள்ளார். 

கைதி படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் படம் இன்னமும் தொடரும் என்பதைப் போலவே முடிக்கப்பட்டிருக்கும். கைதி 2ம் பாகமும் வெளியாகும் என ரசிகர்கள் பேசி வந்தனர். இதை உண்மை என ஒப்புக்கொள்ளும் வகையில், இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இதனால் கைதி படத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. 

இந்நிலையில்தான், கைதி திரைப்படம் ரஷ்ய மொழியில் இன்று வெளியாகியுள்ளது.  ஏற்கனவே கைதி டில்லி எனும் பெயரில் ஜப்பான் மொழியில் வெளியானது இந்த திரைப்படம். இப்போது ரஷ்ய மொழியிலும் வெளியாகியுள்ளது. இதனை கார்த்தி ரசிகர்கள் பெருமையாக பகிர்ந்து வருகின்றனர். ரஷ்யாவின் 121 நகரங்களிலுள்ல 297 திரைகளில் இந்த படம் திரையிடப்படுகிறது. இது மிகவும் பெரிய விசயமாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்