Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காஷ்மீரில் உருவாகும் குஷி! விஜய்க்கு ஜோடி சமந்தா!

UDHAYA KUMAR May 16, 2022 & 14:31 [IST]
காஷ்மீரில் உருவாகும் குஷி! விஜய்க்கு ஜோடி சமந்தா!Representative Image.

காஷ்மீரில் காதல் கதைக்களத்தில் உருவாகி வரும் குஷி திரைப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய் தேவரகொண்டா கைவசம் தற்போது லீகர் எனும் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.  வண்ணமயமான காதல் கதையாக படம் முழுக்க ஒரு ஃபீல்குட் கதைக்களத்தில் பயணிக்கும்.  ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரிலேயே இது புரிகிறது. 

ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் பலர் வரவேற்றுள்ளனர். சமந்தாவை மீண்டும் திரையில் ரசிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சமீபத்தில் தமிழில் சமந்தா, நயன்தாரா நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இன்று ஒரே நாளில் நயன்தாராவின் ஓ2 திரைப்பட அறிவிப்பும், சமந்தாவின் குஷி பட அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  படம் வரும் டிசம்பர் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியிடப்படவுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்