Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Cine News : நயன்தாராவின் o2 ( ஆக்சிஜன் ) டீசர் வெளியீடு..!

Muthu Kumar May 16, 2022 & 13:30 [IST]
Cine News : நயன்தாராவின் o2 ( ஆக்சிஜன் ) டீசர் வெளியீடு..!Representative Image.

Cine News : பிரபல நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள o2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

o2 ( ஆக்சிஜன் )

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா தற்போது o2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் ஜி.கே. விக்னேஷ் இயக்கியுள்ளார்.  இந்நிலையில் இப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

டீசர் வெளியீடு

இந்நிலையில் o2 படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசரில், ”ஒரு முழு பேருந்தும் மண்ணுக்குள் புதைந்து விடுகிறது. அதனால் பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால், சுவாச பிரச்சனைக்காக எப்போது தன் மகளுடன் இருக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை  பேருந்தில் இருக்கும் சக பயணிகள் குறி வைப்பதை அம்மாவான நயன்தாரா எப்படி சமாளிக்கிறார்” என உள்ளது.

இணையத்தில் வைரல்

விறுவிறுப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள o2 படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்