Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பீஸ்ட்டை முந்திய விக்ரம்! விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன்!

UDHAYA KUMAR June 08, 2022 & 14:30 [IST]
பீஸ்ட்டை முந்திய விக்ரம்! விஜய் ரசிகர்களின் ரியாக்ஷன்!Representative Image.

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியாகி உலகம் முழுக்க பட்டையைக் கிளப்பி வசூலித்து வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என சர்வதேச அளவில் பல நாடுகளிலும் திரையிடப்பட்ட இந்த திரைப்படம், வசூலில் ஒவ்வொரு தமிழ் படமாக தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு வருகிறது. 

இந்த திரைப்படம் உலக அளவில் இதனுடன் வெளியான ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வசூலை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பேர்பட்ட வசூல் மழையில் ஒவ்வொரு தமிழ் படமும் பெற்ற சாதனைகளை ஒவ்வொன்றாக தவிடுபொடியாக்கி வருகிறது. இந்நிலையில், தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியிருந்து பீஸ்ட் படத்தின் வசூலை மிஞ்சியுள்ளது விக்ரம் திரைப்படம். கிட்டத்த 50 நாட்கள் ஓடி பீஸ்ட் பெற்ற வசூலை, வெறும் 5 நாட்களில் பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம். 

வழக்கமாக ஒரு படம் தங்கள் நாயகனின் படத்தை மிஞ்சினால், அந்த படம் குறித்து எதிர் வினை ஆற்றத் தொடங்கிவிடுவார்கள். ஆனால் இந்த விசயத்தில் தளபதி விஜய் ரசிகர்கள் மிகவும் பாசிடிவ்வாக பேசி வருகின்றனர். ஆண்டவரின் கம்பேக்கை தாங்கள் கொண்டாடுவதாகவும், அடுத்து விஜய் படம் இந்த படத்தின் சாதனையை முறியடிக்கும். அதன் பிறகு ஆண்டவரின் படம் முறியடிக்கட்டும். இப்படி போனால் தமிழ் சினிமாவுக்கு நல்லது என பேசியுள்ளனர். 

விக்ரம் திரைப்படம்  இதுவரை 66.27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பீஸ்ட் திரைப்படம் 65.45 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்