Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்தானாம்!

UDHAYA KUMAR June 07, 2022 & 20:17 [IST]
டான் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர்தானாம்! Representative Image.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி 100 கோடி வசூல் செய்த படம் டான். இந்த படத்தை இயக்கியவர் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி. கடந்த மே 13ம் தேதி வெளியாகி ரசிகர்கள் பலரையும் கவர்ந்த திரைப்படம். இந்த படத்தில் முதலில் நடிக்கவிருந்தது வேறொரு நடிகராம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நகைச்சுவை, செண்டிமெண்ட் என 50 - 50 சதவிகிதத்தில் பாதி பாதியாக கலக்கி எடுத்த படம் டான். பள்ளி, கல்லூரி வாழ்க்கை, அப்பா செண்டிமென்ட் என கலக்கி எடுத்த படம் இது.  இந்த படத்தின் வசூல் 100 கோடியைத் தாண்டி பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்தது. இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் தான்நான் நடிப்பதாக இருந்தது. ஆனால் கதையைக் கேட்டதும் இதில் வரும் பள்ளிப் பருவ காட்சி, அப்பா செண்டிமென்ட் எதையும் தன்னால் பண்ண முடியாது எனக் கூறி நிராகரித்துவிட்டாராம். இதை அவரே கூறிய நிலையில், சிவகார்த்திகேயன் இதை சிறப்பாக செய்துள்ளார் என தெரிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்