Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் ரசிகர்கள்! விக்ரம் படத்துக்கு இவ்ளோ மவுசு!

UDHAYA KUMAR June 13, 2022 & 19:02 [IST]
கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கும் ரசிகர்கள்! விக்ரம் படத்துக்கு இவ்ளோ மவுசு!Representative Image.

உலகம் முழுக்க கமல்ஹாசனது திரைப்படங்கள் அதிக அளவில் வியாபாரம் ஆகும். சொல்லப்போனால் தமிழில் முதன் முதலில் உலக வியாபாரத்தைத் துவக்கி வைத்ததும், அதிக அளவு தியேட்டர்களில் ஒரே படத்தை திரையிட்டு குறிப்பிட்ட நாட்களிலேயே பல மடங்கு சம்பாதிக்க திட்டமிட்டு கொடுத்ததும் கமல்ஹாசன்தான்.  கமல்ஹாசன் தனது ஆளவந்தான் திரைப்படத்தை தமிழகத்தில் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட்டார். 

ரஜினிக்கும் கமலுக்கும் இடையே நட்பு எந்த அளவுக்கு பிரம்மிப்பாக இருக்கிறதோ அதேபோலத்தான் இருவரும் தமிழ் சினிமாவில் ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்தனர். 1980களுக்குப் பிறகு கமல்ஹாசனின் பாதையில் மாற்றம் ஏற்பட்டது. அவரின் திரைப்படங்களின் வாழ்நாள் அதிகரிக்கும் திட்டத்தில் இருந்தார். அந்த சமயத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் விவாதங்கள் நடக்கின்றன. கமல்ஹாசனின் திரைப்படங்கள் அதிக அளவில் பார்க்கப்படுகின்றன. இந்த சமயத்தில்தான் விக்ரம் வெளியானது. 

ஜூன் 3ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படத்துக்கு முதல் நாளே ஏகபோக வரவேற்பு இருந்தது. உலகம் முழுக்க கமல்ஹாசன் படத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இப்போது 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. 

உலக அளவில் தமிழ் திரைப்படங்களிலேயே அதிக வசூல் செய்த பட்டியலில் டாப் 3 இடத்தைப் பெற்றுள்ளது விக்ரம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்