Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தளபதி 67 லோகேஷின் கனவுப் படமா? குஷியில் விஜய் ரசிகர்கள்!

UDHAYA KUMAR June 13, 2022 & 17:32 [IST]
தளபதி 67 லோகேஷின் கனவுப் படமா? குஷியில் விஜய் ரசிகர்கள்!Representative Image.

விக்ரம் திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கமல்ஹாசனும் அவர் பங்குக்கு லோகேஷை ஊர் ஊராக கூட்டிக் கொண்டு சென்று பெரிய பெரிய நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

விக்ரம் படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து லோகேஷ் சில வாரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த படத்துக்கான ஸ்க்ரிப்ட் வேலைகளைத் துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதுவரை நான்கு பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், அவற்றையெல்லாம் தாண்டி மிகப் பெரிய அளவிலான ஸ்க்ரிப்ட் இது என்கிறார்கள். இதுதான் லோகேஷின் கனவுத் திரைப்படமாம். 

கைதி திரைப்படத்தின்போது லோகேஷ் ஒரு ஸ்க்ரிப்டை எழுதியிருந்தாராம். கேங்க்ஸ்டர் கதையாக உள்ள இந்த ஸ்க்ரிப்ட்டை விரைவில் முடித்துக் கொண்டு தளபதியைச் சந்திக்கவுள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் தளபதி 66 படத்தை முடித்துக் கொண்டு தளபதி 67 படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்