Sat ,Nov 09, 2024

சென்செக்ஸ் 79,486.32
-55.47sensex(-0.07%)
நிஃப்டி24,148.20
-51.15sensex(-0.21%)
USD
81.57
Exclusive

Vikram Official Trailer: யாரு, எப்போ விடியலை பாக்கப்போறா? முடிவு பண்றது இயற்கை இல்ல நான்... வெளியானது விக்ரம் படத்தின் மாஸ் டிரைலர்....

Nandhinipriya Ganeshan May 15, 2022 & 21:30 [IST]
Vikram Official Trailer: யாரு, எப்போ விடியலை பாக்கப்போறா? முடிவு பண்றது இயற்கை இல்ல நான்... வெளியானது விக்ரம் படத்தின் மாஸ் டிரைலர்....Representative Image.

Vikram Official Trailer: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "விக்ரம்". இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி (Vikram release date) வெளியாகியுள்ள நிலையில், கடந்த 12 ஆம் தேதி விக்ரம் படத்தில் அனிருத் இசையமைத்து கமல்ஹாசன் எழுதி, பாடிய பத்தல பத்தல (pathala pathala song lyrics in tamil) பாடல் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. வெளியான முதல் நாளிலேயே 10 மில்லியன் பார்வைகளை கடந்து இன்னமும் பலரால் ராசிக்கப்பட்டு வருகிறது. 

பத்தல பத்தல பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியுள்ளதால், ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இப்படத்தை கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். பாடலின் வெற்றியை தொடர்ந்து, இன்று விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகி உள்ளது. 

அதிரடி காட்சிகள் நிறைந்த இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இப்படத்தில் சூர்யா வரும் (surya vikram movie) காட்சி அவருடைய ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படமும் டிரெண்டிங் லிஸ்ட்டில் டாப்பில் இருக்கிறது. 

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டிரைலர் வெளியாகி சில மணி நேரத்திலேயே 20 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரின் வில்லன் கதாபாத்திரம் மாஸ் காட்டியுள்ளது. அதைவிட கமல்ஹாசன் அவர்களின் "யாரு, எப்போ விடியலை பாக்கப்போறா? முடிவு பண்றது இயற்கை இல்ல நான்" என்ற டையலாக் வேற லெவலில் இருக்கிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்