Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹீரோவாக களமிறங்குகிறார் டிடிஎஃப் வாசன்!.. இது என்ன புது கதையா இருக்கு? | Youtuber TTF Vasan

Aruvi Updated:
ஹீரோவாக களமிறங்குகிறார் டிடிஎஃப் வாசன்!.. இது என்ன புது கதையா இருக்கு? | Youtuber TTF VasanRepresentative Image.

2k கிட்ஸ்களின் மத்தியில் பிரபலம் என கூறப்படுபவர் டிடிஎஃப் வாசன். யூட்யூபரான இவர் கோவையை சேர்ந்தவர். தனது பைக்கில் பல இடங்களுக்கு ரைட் செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவரது யூட்யூப் சேனலுக்கு ஏராளமானோர் சப்ஸ்க்ரைபர்களாக இருக்கின்றனர்.ஏராளமான யூட்யூபர்கள் இருந்தாலும் இவருக்கு 2k கிட்ஸில் பல ரசிகர்கள் இருக்கின்றனர். சினிமா பிரபலத்துக்கு இணையாக இவரை காண கூட்டம் கூடுகிறது. கடந்த வருடம் முன்பு தனியார் ஹோட்டலில் வாசன் பிறந்தநாளை முன்னிட்டு பலர் அங்கு கூடினர். 

எவ்வளவுக்கு எவ்வளவு கூட்டம் கூடுகிறதோ அதே அளவு சர்ச்சையும் இவரை சுற்றி வட்டமிடுகிறது. இவர் மீது சில வழக்குகளும் போடப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்களை இவர் தவறாக வழிநடத்துகிறார் என பலர் பேச, 90ஸ் கிட்ஸுக்கு வயதாகிவிட்டதால் அவர்களால் எங்களை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள்தான் பழைய உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர் என்கின்றனர் 2k கிட்ஸ்.

ஹீரோவாக களமிறங்குகிறார் டிடிஎஃப் வாசன்!.. இது என்ன புது கதையா இருக்கு? | Youtuber TTF VasanRepresentative Image

அதேசமயம், வாசனை கண்டு பல சிறுவர்கள் லட்சக்கணக்கிலான ரூபாய் மதிப்புடைய பைக் மேல் மோகம் கொண்டு வீட்டில் நச்சரிப்பது, அப்படியே பைக் வாங்கினாலும் அசுர வேகத்தில் சென்று விபத்தை சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தனது ரசிகர்கள் என கூறிக்கொண்டு பலரின் புகைப்படங்களை வாசன் அவரது முதுகில் அண்மையில் பச்சைக் குத்திக்கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்கள் முழுக்க வாசன் வாசமே அடித்தது.

இந்நிலையில் டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கிறார் என ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் அவர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 29ஆம் தேதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாசன் யார் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் படத்தில் யாரெல்லாம் பணியாற்றப்போகிறார்கள் என்பது குறித்த மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்